மாறிவரும் டெக்னாலஜி உலகம்....!

By Keerthi
|

இன்றைக்கு நம் உலகம் அதி வேகத்தில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட தொழில் நுட்பங்கள் இன்று மறைந்து வருகின்றன.

இதே போல, இப்போது உள்ள சில தொழில் நுட்பங்களும் மறையும் நிலை தற்போது அதிகரித்து வருகின்றன எனலாம்.

ஒரு காலத்தில், வி.சி.டி. ப்ளேயர் ஒன்றினைச் சரியாக இயங்க வைத்து, அதன் காட்சியை இணைக்கப்பட்ட டிவியில் காட்டும் ஒருவர், பெரிய தொழில் நுட்பம் தெரிந்தவராக்க கருதப்பட்டார்.

நாம் பார்க்காத சேனல், வி.சி.ஆரில் பதிந்து கிடைத்தது பெரிய அதிசயமாக்க் கருதப்பட்டது. 1980 ஆம் ஆண்டில், வினைல் இசைத் தட்டுக்கள் 15 ஆண்டுகளில், மொத்தமாக, வழக்கொழிந்து போகும் என யாராவது எண்ணி இருப்பார்களா?

அதன் பின்னர், வந்த சிடிக்களும் காணாமல் போகும் என நினைத்துப் பார்த்திருப்பார்களா? ''மாற்றம் ஒன்றே மாறாதது'' என்ற கோட்பாட்டினை, இவை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.இனி அடுத்து வழக்கொழிந்து போக இருப்பது, ஸ்மார்ட் போன் திரைகளே என சிலர் அடித்துச் சொல்கின்றனர். அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்கள் தொடர்ந்து வரத் தொடங்கி உள்ளன.

ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் க்ளாஸ் ஆகியவை டச் ஸ்கிரீன் திரைகள் கொண்ட ஸ்மார்ட் போனின் இடத்தைப் பிடிக்க இருக்கின்றன. இந்த 2014 ஆம் ஆண்டில், 1.9 கோடி என்ற எண்ணிக்கையை இந்த அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்கள் எட்ட இருக்கின்றன. 2018ல் இவற்றின் எண்ணிக்கை 11.2 கோடியாக இருக்கும்.

ஆனால், அவை இன்றைக்குக் கிடைக்கும் அணியும் சாதனங்களாக இருக்காது. இவை மேலும் மேம்படுத்தப்பட்டு கூடுதல் வசதிகளுடனும், அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாகவும் இருக்கும். உங்கள் சட்டையில் முதல் பட்டன், உங்களின் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் ட்ரைவிற்கான முகவாயிலாக இயக்கப்படும். கூகுள் கிளாஸ் தொடர்ந்து மேம்பாடு அடைந்து, எல்லாரும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும்.

மாறிவரும் டெக்னாலஜி உலகம்....!

அடுத்த நிலையாக, மனித உடலில் பதித்து இயக்கக் கூடிய RFID சிப்கள் வடிவமைக்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி, நம் வீட்டின் கதவுகளையும், கார் கதவுகளையும் திறக்கலாம். கண் பார்வையிலேயே இவை இயக்கப்படும். இன்னும் 20 ஆண்டுகளில், எந்த செயல் மனிதன் செய்யக் கூடியது, எந்த செயல் கம்ப்யூட்டர் செய்யக் கூடியது என்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகிவிடும்.

இன்றைய சாதனங்களின் பயன்பாட்டில், பேட்டரிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆனால், அவை கையாள்வதற்குப அதிக எடை கொண்டனவாகவும், பெரியனவாகவும், சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்பவையாகவும் உள்ளன. எனவே, பேட்டரிகளுக்கு மாற்றாக, சூப்பர் கெபாசிட்டர்கள் அல்லது எரிபொருள் கொண்ட செல்கள் (Fuel cells) பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.

மவுஸ் மற்றும் கீ போர்ட்கள் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். குரல், கையசைவு, முக அசைவு, கண் அசைவு மற்றும் சில புதிய வகை கட்டளைகள் பயன்பாட்டில் இவற்றின் பயன்பாடு மாற்றிப் பெறப்படும். தொடு உணர் திரை கட்டளைகள் தொடரலாம். ஆனால், அவை ஆய்விற்கு கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோர் மட்டுமே பயன்படுத்தப்படும் சாதனமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
this is the article about the technology changing the world

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X