ஹேக்கர்களின் உண்மை முகம்.!!

Written By:

ஹேக்கிங் : சும்மா இருப்பவனை வம்பிழுக்கும் வழக்கம் எனலாம். ஏதேதோ செய்து ஒரு நிறுவனத்தை துவங்கி அதனினை இணையத்தில் பிரபலமாக்குவது எளிதான காரியமில்லை. இவ்வாறு பிரபலமாகும் நிறுவனம் சந்திக்கும் சவால்களும், சிரமங்களும் ஏராளம். இதில் முதலிடம் பிடிப்பது ஹேக்கிங் தான்.

ஹேக்கிங் என்பது இணைய நெட்வர்க், சமூக வலைதளம், மின்னஞ்சல் போன்றவைகளின் கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பை அத்துமீறி அவைகளின் தகவல்களை திருடுவதாகும். சில சமயம் இவைகளை முடக்கும் சம்பவங்களும் நடைபெறும்.

உலகளவில் பல்வேறு நாட்டு அரசாங்கம், மிகப்பெரிய நிறுவனங்கள், உலக பிரபலங்கள் என பலரும் ஹேக்கிங் மூலம் பாதிக்கப்பட்டோ அல்லது ஹேக்கிங் அனுபவத்தையோ நிச்சயம் பெற்றிருப்பர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

டிஜிட்டல் ட்ரென்ட்ஸ் தகவலின் படி 14 வயது சிறுவன் ஒருவன் $15 செலவு செய்து ஸ்மார்ட் கார் ஒன்றினை ஹேக் செய்துள்ளான். ஒற்றை ஐபோன் மற்றும் சிறிய கருவிகளை பயன்படுத்தி ஸ்மார்ட் காரினை ஹேக் செய்தது குறிப்பிடத்தக்கது.

2

ஒரே நாளில் கார் கதவுகள், வைப்பர் மற்றும் ரிமோட் ஸ்டார்ட் ஆப்ஷன் போன்றவைகளை ஹேக் செய்திருக்கின்றான் இந்த சிறுவன். குறைந்த அளவு கருவிகள் மற்றும் சிறிய பட்ஜெட் மூலம் ஸ்மார்ட் கார் ஒன்றினை ஹேக் செய்திருக்கின்றான்.

3

பல லட்சம் மதிப்புடைய கார் ஒன்றை மிகவும் எளிதாக கைபேசி மட்டும் பயன்படுத்தி ஹேக் செய்த சிறுவன் எத்தகை திறன் வெளிப்பட்டுவிட்டது. இதனை நன்மை பயக்கும் காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது.

4

பொதுவாக ஹேக்கர்கள் தங்களுக்குள் ஒன்றினைந்து செயல்படும் தன்மை கொண்டவர்கள். ஆனால் இவர்கள் தனிமை விரும்பிகள் என்றே பலரும் நினைக்கின்றனர்.

5

டார்க் வெப் போன்ற தளங்களில் ஹேக்கர்கள் தங்களுக்குள் வர்த்தக ரகசியங்கள், தீங்கிழைக்கும் விகாரங்கள் போன்றவைகளை பகிர்ந்து கொள்வர். ஒன்றினைந்து பணியாற்றுவதால் இவர்களின் வளர்ச்சியும் சீராகவே இருக்கும்.

6

ஒன்றினைந்து பணியாற்றுவதால் ஹேக்கர்கள் முன்பை விட அதிக நுட்பமாக செயல்படுகின்றனர். இதற்கு இவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளை எடுத்துக்காட்டாக குறிப்பிட முடியும்.

7

ஹேக்கர்கள் மிகப்பெரிய நிறுவனங்களை கைப்பற்றும் அளவு சக்தி வாய்ந்தவர்கள். இதற்கு தி வெர்ஜ் செய்தியை சான்றாக கூற முடியும். சில ஹேக்கர்கள் இணைந்து மின் ஆலையையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

8

மேலும் ஹேக்கர்கள் நினைத்தால் மிக முக்கியத்துவம் வாய்ந்த மோஷன் பிக்சர்களையும் தடுத்து நிறுத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது.

9

இவர்களால் 'எதையும்' ஹேக் செய்திட முடியும். முன்னதாக ஹேக் செய்யாத ஒரு விடயம் இருக்கின்றது என்றால் இவர்களால் அதனினையும் ஹேக் செய்ய முடியும்.

10

இதுவரை கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து கேள்வி பட்டிருப்போம், இனி இந்த பட்டியலில் அனைத்து ஸ்மார்ட் அம்சங்களையும் சேர்த்து கொள்ளலாம்.

11

அனைத்து ஹேக்கரும் நாம் தயாராக இருக்க கூடாது என்றே விரும்புவர். அவர்களுக்கு கடுமையான சர்வர்களை ஹேக் செய்வது பிடித்தமான ஒன்று என்றாலும், எளிமையாக கிடைக்கும் ஒன்றை விடுவார்களா என்ன.?

12

உங்களது தரவுகள் பாதுக்காப்பின்றி இருக்குமானால் அதனினை ஹேக்கர்கள் மிகவும் எளிமையாக ஹேக் செய்ய நேரிடலாம். முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் இந்த ஆபத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Surprising facts about hackers Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்