Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

புதிய வசதிகளுடன் வரும் சோனி லேப்டாப்புகள்!

Updated: Friday, May 18, 2012, 15:09 [IST]

sony upgrades vaio s and z series launches 2 e models

சோனி நிறுவனம் தனது வயோ இ வரிசையில் இரண்டு புதிய லேப்டாப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த லேப்டாப்புகளுக்கு வயோ இ 15 மற்றும் வயோ இ 17 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு லேப்டாப்புகளும் மெகா பெரிய திரைகளுடன் வருகின்றன. அதாவது வயோ இ 15 லேப்டாப் 15.5 இன்ச் அளவுடனும் அதே நேரத்தில் வயோ இ 17 லேப்டாப் 17.3 இன்ச் அளவுடனும் கூடிய திரைகளுடன் வருகின்றன.

இந்த இரண்டு லேப்டாப்புகளுமே ப்ளூ-ரே ப்ளேயர்களைக் கொண்டிருப்பதால் இவை இரண்டும் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த லேப்டாப்புகளாக இருக்கும்.

இந்த வயோ லேப்டாப்புகள் இன்டல் கோர் ஐ5-2450 எம் சிபியு கொண்டுள்ளதால் இதன் வேகம் அதிரடியாக இருக்கும். அதுபோல் இவற்றில் உள்ள எஎம்டி ரேடியோன் 7650எம் ஜிபியு கிராபிக்கல் கார்டு இந்த லேப்டாப்புகளில் க்ராபிக்ஸ் வேலைகளைச் செய்ய பேருதவியாக இருக்கும்.

இரண்டு லேப்டாப்புகளுமே 1ஜிபி மற்றும் 2ஜிபி விரேம் வசதிகளைக் கொண்டுள்ளதால் ரேம் அளவை விருப்பம் போல தேர்ந்து கொள்ளலாம். இந்த இரண்டுமே 750ஜிபி ஹார்ட் ட்ரைவைக் கொண்டுள்ளன.

இணைப்பு வசதிகளுக்காக வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி, வெப்காம், எச்டிஎம்ஐ போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அதனால் இதில் சூப்பரான வீடியோ உரையாடலை நடத்த முடியும்.

இப்போது சோனி தனது வயோ எஸ் மற்றும் வயோ ஸட் வரிசை லேப்டாப்புகளக்கு ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களை அப்டேட் செய்யவிருக்கிறது. மேலும் இவற்றில் பேக்லிட் கீபோர்டுகளும் அப்டேட் செய்யப்படும். இந்த அப்டேட் செய்யப்பட்டு வரும் இந்த லேப்டாப்புகள் 13.5 மற்றும் 15.5 அளவுகளில் வரும்.

அதுபோல் வயோ எஸ் 13 மாடல் இன்டல் கோர் ஐ7-3612 க்யுஎம் ப்ராசஸர்கள் மற்றும் 8ஜிபி ரேம், என்விடியா க்ராபிக் கார்டு மற்றும் எஸ்எஸ்டி வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் வயோ ஸட் வரிசை 13.1 இன்ச் லேப்டாப் இன்ட்ல் கோர் ஐ7 சிபியு ப்ராசஸர், 8ஜிபி ரேம், பவர் மீடியா டோக் மற்றும் எஎம்டி ரேடியோன் எச்டி 7670எம் க்ராபிக்ஸ் ஆகிய வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட் செய்யப்படும் சோனி வயோ ஸட் வரிசை மற்றும் எஸ் வரிசோ லேப்டாப்புகளில் விலையும் அதே நேரத்தில் புதிதாக வரவிருக்கும் வயோ இ வரிசை புதிய லேப்டாப்புகளின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published:  Friday, May 18, 2012, 15:09 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll