Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சோனியின் அழகான புதிய லேப்டாப்புகள்!

Updated: Friday, June 15, 2012, 12:35 [IST]

sony launches vaio t ultrabook and vaio e14a in india

சோனி இந்தியா நிறுவனம் தனது புதிய லேப்டாப்புகளை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புகளுக்கு சோனி வயோ இ14எ மற்றும் சோனி வயோ டி அல்ட்ராபுக் என்று பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

மேலும் சோனி தனது சோனி வயோ இ, எஸ் மற்றும் ஸட் வரிசைகளில் புதிய லேப்டாப்புகளை விரைவில் களமிறக்க இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டுக்குள் 6.5 லட்சம் சோனி வயோ லேப்டாப்புகளை விற்பனை செய்ய சோனி திட்டமிட்டிருக்கிறது.

சோனி வோயோ இ14எ லேப்டாப்புகள் மிகவும் ஸ்டைலாக ராப் டிசைனில் வருகிறது. இதன் தொடுதளம் மற்றும் கீபோர்டு ஆகியவை அம்சமாக உள்ளன. இதன் விலை ரூ.59,990லிருந்து ரூ.65,990க்குள் இருக்கும்.

அடுத்ததாக சோனி வயோ டி லேப்டாப் சோனியின் முதல் அட்ராபுக் ஆகும். இந்த புதிய லேப்டாப் எர்த்நெட், விஜிஎ, யுஎஸ்பி 3.0 மற்றும் 2.0 மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்டுகளுடன் வருகிறது. இந்த அல்ட்ராபுக் 11.6 மற்றும் 13.3 இன்ச் ஆகிய அளவுகள் கொண்ட திரைகளுடன் வருகிறது. இந்த அல்ட்ராபுக் ரூ.45,990லிருந்து கிடைக்கும்.

அதோடு சோனி வயோ ஸட், எஸ் மற்றும் இ வரிசை லேப்டாப்புகளும் களம் இறங்க இருக்கின்றன. சோனி வயோ ஸட் லேப்டாப் முழு எச்டி டிஸ்ப்ளே, 5.5 மணி நேர இயங்கு நேரம் கொண்ட பேட்டரி, குறைவான எடை மற்றும் சூப்பரான செயல் திறன் ஆகிய அம்சங்களைக் கொண்டு வருகிறது. இதன் விலை ரூ.1,79,900 ஆகும்.

சோனி வயோ எஸ் லேப்டாப்பை ஒரு மொபைல் பிசி என்று அழைக்கலாம். குறைந்த எடையில் வரும் இந்த லேப்டாப் நீடித்த இயங்கு நேரத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக அடிக்கடி பயணம் மேற்கொள்கின்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இந்த லேப்டாப் ஏதுவாக இருக்கும்.

Story first published:  Friday, June 15, 2012, 12:35 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll