விரைவில் சாம்சங் வழங்கும் உயர்தர அல்ட்ராபுக்குகள்

By Karthikeyan
|
விரைவில் சாம்சங் வழங்கும் உயர்தர அல்ட்ராபுக்குகள்

மொபைல் சந்தையில் முடிசூடா மன்னனாக இருந்து வரும் சாம்சங் வரிசையாக தனது புதிய தயாரிப்புகளை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. அந்த வகையில் சாம்சங்கின் இரணடு புதிய விண்டோஸ் 8 டேப்லெட்டுகளை விரைவில் எதிர்பாரிக்கலாம். அவற்றைத் தவிர்த்து சீரிஸ் 5 அல்ட்ரா டச் நோட்புக் என்று புதிய லேப்டாப்பை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது சாம்சங்.

விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் இந்த சாம்சங் லேப்டாப் ரூ.64,990க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த விண்டோஸ் 8 லேப்டாப் சூப்பாரன தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் இன்டல் கோர் ஐ5 ப்ராசஸரில் வருகிறது. அதோடு இந்த லேப்டாப் 13.3 இன்ச் அளவில் தொடுவசதியுடன் கூடிய ஒரு டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

மேலும் இந்த லேப்டாப் 8ஜிபி டிடிஆர் 3 ரேம் கொண்டிருப்பதால் இது ஒரே நேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்யக் கூடியது. ஆனால் இதில் ஆப்டிக்கல் ட்ரைவ் கிடையாது. மெமரிக்காக இந்த லேப்டாப் 500 ஜிபி ஹார்ட் ட்ரைவுடன் வருகிறது. அதுபோல் விரைவான பூட்டிங்கிற்காக 24ஜிபி கேச்சையும் இந்த லேப்டாப் கொண்டிருக்கிறது.

இணைப்பு வசதிகளுக்காக இந்த லேப்டாப்பில் முழுமையான எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் ஆல் இன் ஒன் ரீடர் போன்ற வசதிகளயும் பார்க்கலாம். இந்த லேப்டாப் 6.5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

இந்த லேப்டாப்பைத் தவிர்த்து சீரிஸ் 5 அல்ட்ராபுக் என்ற லேப்டாப்பையும் சாம்சங் வழங்குகிறது. எஎம்டி குவாட்கோர் ப்ராசஸரில் வரும் இந்த லேப்டாப் ரூ.43,990க்கு விற்கப்பட இருக்கிறது. மேலும் 1 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சீரிஸ் 9 நோட்புக் என்ற புதிய லேப்டாப்பையும் ரூ.1,07,990க்கு வழங்க இருக்கிறது சாம்சங்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X