உலகின் அமைதியான நிறுவனம் இதுதான்...!

Written by: Jagatheesh

உலகத்தில் உள்ள பல நிறுவனங்களில் இரைச்சலற்ற சூழல் நிலவுவதில்லை ஏனெனில் சில சாதனங்களை தயாரிக்கும்போது அதிக ஒலி ஆனது எழுப்படுகிறது. இதனால் பலர் இரைச்சலின் இடைய வேலை செய்யக் கூடிய நிலமை ஏற்படுகிறது.

அவ்வாறு இருக்கையில் உலகில் பல நிறுவனங்கள் இரைச்சல் இன்றி மிகவும் நிசப்பத்தமான சூழலில் சாதனங்களை தயாரிக்கின்றன.

அந்த வகையில் ஐ.பி.எம் நிறுவனமும் ஒன்று, சுவிஸ்சர்லாந்து நாட்டில் Zurich என்ற இடத்தில் ஐ.பி.எமின் நானோ டெக்னாலஜி நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் இரைச்சல் என்ற சொல்லுக்கே இடமில்லை அப்படி ஒரு நிசப்த்தமான சூழலில் பணிபுரிகின்றனர் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள்.

நானோ டெக்னாலஜி சாதனங்களை தயாரிக்க அமைதியான சூழல் தேவைப்படுவதால். இப்படி ஒரு நிறுவத்தை நிறுவி இருக்கிறார்கள். இது போன்று பல நிறுவங்கள் மற்றும் இடங்கள் நம் பூமியில் இருக்கின்றனவாம்.

அப்படி என்னென்ன இடங்களில் அமைதியான சூழல் நிலவுகின்றன என்பதை பார்ப்போமா....

ஸ்மார்ட் போன்களுக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

சுவிஸ்சர்லாந்து நாட்டில் Zurich என்ற இடத்தில் ஐ.பி.எமின் நானோ டெக்னாலஜி நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் இரைச்சல் என்ற சொல்லுக்கே இடமில்லை அப்படி ஒரு நிசப்த்தமான சூழலில் பணிபுரிகின்றனர் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள். இந்த இடத்தின் மொத்த சுற்றளவு 21000 sq feet ஆகும்.

#2

இது ஒரு இரைச்சலற்ற அறை , இந்த அறையில் எவ்வளவு ஒலி எழுப்பினாலும் வெளியில் ஒரு சின்ன அளவு இரைச்சல் கூட கேட்காதாம். இந்த அறையை ஆங்கிலத்தில் 'noise-free room' என்றும் அழைப்பார்கள்.

#3

இவர்தான் டாக்டர் இமானுவேல் இவர் இரைச்சலை தடுப்பதற்க்கான செய்முறை விளக்கத்தை அளித்தபோது எடுத்த புகைப்படம் தான் இது. இதில் தெரியும் பெரிய ஓட்டையானது 'portal' என்று அழைப்பார்கள். இவற்றின் உதவியுடன் தான் இரைச்சலானது கட்டுப்படுத்தப்படுகிறது.

#4

இந்த அறையில் தான் 'Transmission electron microscope' உள்ளது . இதில் சிறிதளவு இரைச்சல் கூட வெளியில் கேட்காது. இதனை பார்க்க முடியும் மற்றும் இதனுடன் சிறிதளவான நானோ அளவுகோலை கொண்டு வேலை செய்வார்கள்.

#5

இந்த புகைப்படத்தில் காண்பவர் Transmission electron microscope ஐ இயக்குபவர் ஆவார். இந்த அறையும் noise-free zone எனப்படும் இரைச்சலற்ற பகுதியாகும். நானோ டெக்னாலஜி தயாரிக்கும் இடமாக இருப்பதனால் அமைதியான சூழல் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதனால் தான் இப்படிப்பட்ட சூழலை உருவாக்கி இருக்கிறார்கள்.

#6

இந்த Transmission electron microscope ஆனது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இவற்றின் உதவி இல்லாமல் நானோ சாதங்களை நம் சாதாரன கண்களைால் பார்க்க இயலாது எனவே தான் இது போன்ற Transmission electron microscope ஐ நானோ டெக்னாலஜியில் பயன்படுத்துகிறார்கள். இது நானோ சாதனங்களை தெளிவாகப் பார்க்க உதவுகிறது.

#7

இது 'spin-polarized scanning electron microscope' ஆய்வுக்கூடம். இதில் எல்லாவகையான கருவிகளும் இருக்கும் இடம். இதுவும் ஒரு இரைச்சலற்ற அறை ஆகும். இந்த புகைப்படத்தில் காண்பவர் ஐ.பி.எமின் இயற்பியல் வல்லுனரான Dr. Rolf Allenspach ஆவார். ஒரு நானோ அளவுகோலைக் கொண்டு ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம் ஆகும்.

#8

இந்த ஆய்க்கூடத்தில் நானோ டெக்னாலஜி முறையை பயன்படுத்தி பல்வேறான சாதங்கள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இதுவும் ஒரு இரைச்சலற்ற ஆய்வுக்கூடம் ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன்களுக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்