செப்டம்பர் 30 முதல் மூடப்படும் ஆர்குட்....!

Written By:

பேஸ்புக் இந்தியாவில் பிரபலமாவதற்கு முன்னரே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த சமூக வலைத்தளம் ஆர்குட்(Orkut) தான்.

பின்பு பேஸ்புக்கின் அபரீத வளர்ச்சியை கண்டு ஆர்குட், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மிரண்டு போயின அவற்றை பின்னுக்கு தள்ளி முன்னே சென்றது பேஸ்புக்.

அதன்பின்பு ட்விட்டர் ஓரளவு தாக்குப்பிடித்துவிட்டது ஆனால் ஆர்குட்டால் தான் தாக்கு பிடிக்க முடியவில்லை என்று கூறலாம்.

செப்டம்பர் 30 முதல் மூடப்படும் ஆர்குட்....!

வெகு காலமாக பயனற்று கிடந்த இந்த ஆர்குட்டை வரும் செப்டம்பர் மாதத்துடன் கூகுள் நிறுவனம் மூட திட்டமிட்டுள்ளது.

அதன்படி வரும் செப்டம்பர் 30 முதல் ஆர்குட் செயல்படாது என்று கூகுள் அறிவித்துள்ளது இந்த ஆர்குட்டில் இருக்கும் ஒரு பெரும் வசதி இன்னும் பேஸ்புக்கில் வரவில்லை.

அதுதான் நமது ப்ரொபைலை யார் யார் வந்து பார்த்துள்ளார்கள் என்று நாம் பார்க்கும் வசதி இந்த வசதி ஆர்குட்டில் அப்பவே வந்துவிட்டது ஆனால் பேஸ்புக்கில் இன்று வரை வரவில்லை.

எது எப்படியோ வரும் செப்டம்பர் 30 முதல் ஆர்குட் கடை சாத்தப்படுகின்றதுங்க.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்