இந்தியாவில் விரைவில் வெளியாகயிருக்கும் நோக்கியாவின் முதல் ஆன்டிராய்டு டேப்ளெட்

By Meganathan
|

எதிர்பார்த்தை போலவே ஆன்டிராய்டு மூலம் இயங்கும் முதல் நோக்கியா டேப்ளெட் சீனாவில் மட்டும் வெளியானது. புதிய நோக்கியா N1 டேப்ளெட் இந்தியாவில் ரூ.16,308 விலையில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்ற நாட்டு சந்தைகளின் வெளியீடு குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றது நோக்கியா நிறுவனம். மேலும் ஐரோப்பாவில் அடுத்த மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் வெளியாகயிருக்கும் நோக்கியாவின் ஆன்டிராய்டு டேப்ளெட்

கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா N1 சீனாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது. இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை 7.9 இன்ச் ஐபிஎஸ் எல்ஈடி- பேக்லிட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது, 64 பிட் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டம் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ராமும் உள்ளது.

மெமரியை பொருத்த வரை 32ஜிபி இன்டெர்னல் மெமரியும் 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமராவும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவோடு 5300 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்கும் இந்த டேப்ளெட் வைபை, ப்ளூடூத் 4.0 ஆப்ஷன்களும் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Nokia's First Android Tablet Expected soon in India. The first Nokia-branded Android tablet, the Nokia N1, as expected, has been launched in China. The tablet is currently up for pre-orders.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X