8 இன்ச் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் பி666 ரூ.10,999 க்கு வெளியானது..

By Meganathan
|

இந்திய வாடிக்கையாளர்களுக்கு உயர் ரக மொபைல் கருவிகளை கொடுக்க மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 8 இன்ச் கேன்வாஸ் டேப் பி666 மாடலை வெளியிட்டது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் பி666 ரூ.10,999 க்கு வெளியானது

கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் கேன்வாஸ் டேப் பி666 இந்தியாவில் ரூ.10,999 ரூபாய்க்கு விற்க்கப்படும் என்றும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் விற்பனைக்கு வருகின்றது.

இன்டெல் ஆட்டம் பிராசஸர் இசட்2520 பிராதஸர் மூலம் இயங்குவதோடு இந்த டேப்ளெட் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

இந்த டேப்ளெட் 8 இன்ச் WXGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 800*1200 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளதோடு 1 ஜிபி ராம் கொண்டு ஆன்டிராய்டு கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்தவரை 5 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.

3ஜி சிம் சப்போர்ட் செய்யும் இந்த டேப்ளெட்டில் 8 ஜிபி மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளதோடு 4400 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
Micromax Launched Canvas Tab P666 Tablet At Rs 10,999.Micromax, today, announced a strategic collaboration with Intel in India aimed at offering a bouquet of high-performance mobile devices to the Indian consumer.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X