Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

லெனோவாவின் புதிய ஆல்இன் ஒன் கம்ப்யூட்டர்!

Updated: Wednesday, July 25, 2012, 9:41 [IST]

lenovo launches the worlds slimmest all in one pc ideacentre a720 at rs 89990

லெனோவா நிறுவனம் ஒரு புதிய ஆல் இன் ஒன் பிசியை அறிவித்திருக்கிறது. இந்த புதிய கணினிக்கு ஐடியா சென்டர் எ720 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆல் இன் ஒன் கணினி 3ஜி இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் மற்றும் ப்ரேம்லெஸ் டிஸ்ப்ளையுடன் வருகிறது.

இந்த லெனோவோ ஆல் இன் ஒன் கணினி 27 இன்ச் அளவுள்ள தொடுதிரையுடன் வருகிறது. 10 விரல்களையும் கொண்டு இதை இயக்கலாம். மேலும் இதன் திரைய வசதிக்கு ஏற்ப மடக்கி வைக்கவும் முடியும். இந்த கணினி ரூ.89,990க்கு விற்கப்பட இருக்கிறது.

இந்த கணினி பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இது விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் மற்றும் விண்டோஸ் 8 இயங்கு தளத்துடன் வர இருக்கிறது. என்விடியாவின் ஜிஇபோர் ஜிடி 630எம் 2ஜிபி க்ராபிக்ஸ் இந்த கணினியில் உள்ளதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளை மிக சூப்பராக செய்யலாம்.

இதில் உள்ள 8ஜிபி டிடிஆர்3 மெமரியை எஸ்எஸ்டி கார்டு மூலம் 1டிபி எச்டிடி மற்றும் 64ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். மேலும் இந்த கணினி டிடிவி ரீடர் மற்றும் ரைட்டர் மற்றும் ப்ளூ ரே டிஸ் ட்ரைவா ஆகியவற்றுடன் வருகிறது.

இணைப்பு வசதிக்காக ப்ளூடூத், வைபை, யுஎஸ்பி, மற்றும் 6 இன் ஒன் கார்டு ரீடர் போன்றவையும் உள்ளன. அதோடு இதில் 720பி வெப்காமும் உள்ளதால் இதில் மிக எளிதாக வீடியோ உரையாடலை நடத்தலாம்.

இந்த புதிய ஆல் இன் ஒன் கணினி டோல்பை ஹோம் தியேட்டர் வசதியுடனும் வருகிறது. அதனால் இதில் மிக சூப்பராக பாடல்களைக் கேட்கலாம். மேலும் டிவி டியூனரும் இதில் உண்டு. இந்த கணினி மிகவும் வேகமாகவும் இயங்கக்கூடியது.

இதில் உள்ள லெனோவா டைனமிக் ப்ரைட்னல் சிஸ்டம் இந்த கணினியின் திரையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாது.

Story first published:  Wednesday, July 25, 2012, 9:41 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll