
இந்த புதிய மின்னணு சாதனத்தின் ஒரு சில தொழில் நுட்ப வசதிகள் மட்டும் வெளியாகி உள்ளது. இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் டைப் செய்வதற்கு கனகச்சிதமாக இருக்கும் சிக்லெட் கீப்பேர்ட் வடிவமைப்பை கொண்டுள்ளது.
இதன் வடிவமைப்பு பார்த்தவுடன் கவரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லெனோவோ நிறுவனத்தின் இந்த புதிய எச்-520 கம்ப்யூட்டர் சாதாரண டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையும் விட இரண்டு மடங்கு சிறியதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
எச்-430 கம்ப்யூட்டர் 2-வது, 3-வது ஜெனரேஷன் இன்டெல் கோர் ஐ பிராசஸரை கொண்டு செயல்படும். இதனால் சிறந்த தொழில் நுட்பத்திற்கும், அதி வேகத்திற்கும் இந்த லெனோவோ டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் எளிதாக சப்போர்ட் செய்யும்.
ஐடியாசென்டர் எச்-520 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ரூ. 21,250 விலையினையும், ஐடியாசென்டர் எச்-430 ரூ. 24,990 விலையையும் கொண்டது.






























