
விண்டோஸ்-7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், இன்டெல் நிறுவனத்தின் 2 மற்றும் 3-வது ஜெனரேஷன் கோர் ஐ-7 பிராசஸரை கொண்டது.
உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த கம்ப்யூட்டர் 8 ஜிபி ரை டிடிஆர்-3 ரேம் வசதியினை கொடுக்கும். செகன்டரி ஸ்டோரேஜ் வசதி, ப்ளூ-ரே டிஸ்க் ட்ரைவ் போன்ற பல வசதிகளையும் இந்த கம்ப்யூட்டரில்
பயன்படுத்தலாம்.
17.42 பவுண்டு எடை கொண்ட இந்த கம்ப்யூட்டர், கறுப்பு மற்றும் கிரே நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லேப்டாப்களை பயன்படுத்தினாலும் வீட்டில் வைத்து பயன்படுத்த ஒரு சிறப்பான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த லெனோவோ ஐடியாசென்டர் எச்-520-எஸ் கம்ப்யூட்டர் சிறந்ததாக இருக்கும்.
இந்த கம்ப்யூட்டர் இந்திய சந்தையில் எப்போது வெளியாகும் என்பது பற்றி எந்த தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் இதன் விலை விவரம் இங்கே கொடு்க்கப்பட்டுள்ளது. ஐடியாசென்டர் எச்-520-எஸ் கம்ப்யூட்டர் ரூ.25,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.






























