Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கார்பன் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டேப்லட்!

Updated: Monday, March 25, 2013, 12:15 [IST]

karbonn officially launches smart tab 1 at rs 6990
கார்பன் நிறுவனம் தனது முதல் ஆன்ட்ராய்டு டேப்லட்டினை இன்று அறிமுகம செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் மத்தில் சிறந்த பெயரை பதிக்க முயற்சி செய்து வருகிறது கார்பன் நிறுவனம்.

தற்போது ஸ்மார்ட் டேப்-1 என்ற பெயரில் அறிமுகமான இந்த புதிய டேப்லட் கூகுள் ஆன்ட்ராய்டு வி4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினையும் வழங்கும்.

இந்திய மொபைல் நிறுவனங்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட தொழில் நுட்ப சாதனத்தை முதலில் அறிமுகம் செய்துள்ளது கார்பன் நிறுவனம் என்று கூறியுள்ளார் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான தேவ்சர்.

அதுமட்டும் அல்லாது அடுத்த மூன்று மாதத்தில் 4 புதிய ஸ்மார்ட்போன்களையும், 3 புதிய டேப்லட்களையும் அறிமுகம் செய்வதாகவும் தேவ்சர் தெரிவித்துள்ளார்.

9.7 இஞ்ச் திரையையும், கூகுளின் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளத்தினையும் கொண்ட புதிய டேப்லட்டை வருகிற செப்டம்பர் மாதம் கார்பன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இன்று அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட் டேப்-1 டேப்லட் ரூ. 6,990 விலை கொண்டதாக இருக்கும். ஆப்பிள் நியூ ஐபேட், மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் போன்ற காஸ்ட்லி டேப்லட்களுக்கு மத்தியில் கார்பன் ஸ்மார்ட் டேப்-1 டேப்லட்டின் விலை மிகவும் குறைந்ததாக இருக்கும்.

Story first published:  Friday, July 6, 2012, 10:17 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll