இணையதளங்களின் பெயர்களில் உள்ள தகவல்கள்...!

By Keerthi
|

இன்றைக்கு இணைய தள முகவரிகளில், துணைப் பெயரினை நம் விருப்பப்படி அமைக்க முடியாது. ஏனென்றால், அவை இணையதளப் பெயர்களின் வகைகளைக் குறிக்கும்.

தொழில்நுட்ப ரீதியாக, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான், அவற்றை அமைப்பதும், அனைவரும் பயன்படுத்துவதும் இயலும். com, net, biz, edu போன்றவற்றை வரைமுறைப்படுத்தும் அமைப்பாக "ஐகான்" (ICANN(Internet Corporation for Assigned Names and Numbers)), செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு பல புதிய வகைப் பெயர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

முதலில் இணையதளப் பெயர்களின் துணைப் பெயராக .com என்பதுதான் பலரும் பயன்படுத்தும் பெயராக இருந்து வந்தது. 1990 ஆம் ஆண்டு வாக்கில், உருவாக்கப்பட்ட இணைய தளங்களின் எண்ணிக்கை திடீரென பன்னாட்டளவில் அதிகமானதால், புதிய வகைப் பெயர்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இணையதளங்களின் பெயர்களில் உள்ள தகவல்கள்...!

இதனை "dot com" boom என அனைவரும் அழைத்தனர். பின்னர், படிப்படியாக புதிய வகைப் பெயர்கள் தரப்பட்டன. அவற்றை இணைய நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கின.

அண்மையில், ஐகான் அமைப்பு ஏழு புதிய வகைப் பெயர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவை .bike, .singles, .clothing, .guru, .holdings, .plumbing, மற்றும் .ventures. இந்த பெயர்களைக் கொண்டிருப்பது, அந்த இணையதளத்தினை உருவாக்கி வைத்து இயக்கும் நிறுவனத்தின் தன்மையைக் காட்டும்.

எடுத்துக் காட்டாக ".bike" என்ற வகைப் பெயர், அத்தளம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் இணைய தளமாக இருக்கும் என்பதனை நாம் அறியலாம். இந்த ஏழு பெயர்களுடன் நின்றுவிடாமல், மேலும் பல புதிய வகைப் பெயர்கள், ஐகான் அமைப் பின் பரிசீலனையில் உள்ளன.

இவற்றிற்கு அனுமதி வழங்குவதில், பாதுகாப்பு நடவடிக்கை முதல் பல அம்சங்களைக் கவனிக்க வேண்டி யுள்ளதாக, ஐகான் அறிவித்துள்ளது.

தங்களுக்கென மட்டும் சில வகைப் பெயர்களை வைத்துக் கொள்ள விரும்பும் நிறுவனங்கள், அவற்றிற்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று ஐகான் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
this is the article about the internet address and its uses

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X