மேக் இன் இந்தியா : 2017'இல் தயாராகும் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்.!!

Written By:

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் அடுத்த ஆண்டு தயாரிகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் உயர்ந்து நிற்கும் உலக நாடுகளின் பட்டியலில் இடம் பெற இந்த திட்டம் வழி செய்யும் என கூறப்படுகின்றது. இந்தியாவில் இந்த திட்டம் ரூ.4,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரான பரம்தனை உருவாக்கிய மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையம் இந்த சூப்பர் கம்ப்யூட்டரினை தயாரித்து வருவதாக மத்திய அரசின் தொழில்நுட்பத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2

தேசிய சூப்பர்கம்ப்யூட்டிங் திட்டத்தினை மத்திய அரசு மார்ச் 2015 இல் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஏழு ஆண்டுகளில் சுமார் 80 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

3

இதில் சில கம்ப்யூட்டர்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் சில கம்ப்யூட்டர்கள் முழுமையாக இந்தியாவிலேயே கட்டமைக்கப்படும். இதில் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் ஆகஸ்டு 2017 ஆம் ஆண்டு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4

இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களை இயக்க ரூ.1,000 கோடி வரை செலவாகும் என்றும், தற்சமயம் இந்த கம்ப்யூட்டர் வெளியிடும் வெப்பத்தினை சமாளிப்பது எப்படி என்பதில் பணியாற்றி வருவதாக இத்திட்டத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

5

இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் இந்தியாவில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு கிளைமேட் மாடலிங், வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும்.

6

தற்சமயம் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலக நாடுகள் சூப்பர் கம்ப்யூட்டர் வைத்திருப்பதில் முன்னிலை வகிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
India Will Have First Make In India Supercomputer By 2017. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்