வைரஸ் வந்த கம்பியூட்டரை இப்படி செய்யுங்கள்...!

By Keerthi
|

நாம் கம்பியூட்டரை பயன்படுத்துகையில் நமக்கே தெரியாமல் சில வைரஸ்கல் நமது கம்பியூட்டருக்குள் வந்துவிடும்

இதனால் புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது.

உங்களுடைய கம்ப்யூட்டரை இன்டர்நெட் இணைப்பி லிருந்து நீக்கவும். கம்ப்யூட்டரை சுத்தப் படுத்த நீங்கள் தயாராகும்வரை இன்டர்நெட் இணைப்பினைத் தர வேண்டாம். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர், பரவுவதையும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதனையும் தடுக்கலாம்.

உங்களுடைய கம்ப்யூட்டரில் மால்வேர் இருப்பதாக உணர்ந்தால், சேப் மோடில் பூட் செய்திடவும். இதற்கு கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின்னர் எப்8 கீயின் இடம் அறியவும். பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கி, திரையில் ஏதேனும் தென்பட்டவுடன், எப்8 கீயினைத் தட்டிக் கொண்டே இருக்கவும்.

இதனால், Advanced Boot Options என்ற மெனு கிடைக்கும். அதில் Safe Mode with Networking என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். சேப் மோடில் உங்கள் கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் சற்று வேகமாக இயங்கு வதனைக் காணலாம். அவ்வாறு இயங்கி னால், மால்வேர் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது.

#1

#1

சேப் மோடில் இருந்தபடி, வைரஸ் ஸ்கேன் செய் திட நீங்கள் விரும்பலாம். அதற்கு முன்னர், தற்காலிக பைல்களை நீக்கவும். இதனால், டிஸ்க் இடம் சற்று கூடுதலாகக் கிடைக்கும்; வைரஸ் ஸ்கேனிங் வேகமாக நடைபெறும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் Disk Cleanup utility என்பதைப் பயன்படுத்த, Start, All Programs எனச் செல்லவும்.

#2

#2

உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்து வைத்திருந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாக, வேறொரு மால்வேர் ஸ்கேனிங் அல்லது எதிர்ப்பு புரோகிராமினை இயக்கவும். இதற்காக, இணையத்திலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். லட்சக் கணக்கில் மால்வேர் புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள் இருப்பதால், எந்த ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் எதிர்ப்பு புரோகிராம்கள் அவை அனைத்தையும் நீக்கும் என எண்ண வேண்டாம்.

#3

#3


நாம் எப்போது நாமாக இயக்குகிறோமோ, அப்போது இயங்கத் தொடங்கி, மால்வேர்களை அழிக்கும் புரோகிராம்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும். அதனை அடுத்து, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.

#4

#4

இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின்னர், இணைய இணைப்பினை நிறுத்திவிட்டு, ஸ்கேன் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இதனை தரவிறக்கம் செய்திட முடியாத போது, மற்றொரு கம்ப்யூட்டரின் இணைய இணைப்பில் பெற்று, இதில் இன்ஸ்டால் செய்திடலாம்.

மால்வேர் பைட்ஸ் ஸ்கேன் செய்திடுகையில் ‘Perform quick scan' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். அதிக பட்சம் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இந்த ஸ்கேன் பணி செயல்படுத்தப்படும். இந்த பணி நடைபெறுகையில், இந்த ஸ்கேனர் மறைந்து பின்னர் அதனை மீண்டும் பெற இயலவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் ரூட்கிட் என்ற வைரஸ் அல்லது அதனைப் போன்று செயல்படும் வைரஸ் உள்ளது என்பது உறுதி.

#5

#5

ஏனென்றால், இந்த வகை வைரஸ்கள், எந்த ஸ்கேனரையும் இயங்கவிடாமல், அவற்றையும் முடக்கி விடும் தன்மை கொண்டன. அப்படிப்பட்ட வைரஸ் இருந்தால், உங்கள் பைல்கள் அனைத்தையும் பேக் அப் செய்த பின்னர், விண்டோஸ் இயக்கத்தை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்வதே சிறந்த வழியாகும்.

மால்வேர் பைட்ஸ் வெற்றிகரமாக இயங்கி முடித்த பின்னர், பைல்களின் நிலை குறித்த அறிக்கை ஒன்று டெக்ஸ்ட் பைலாகக் கிடைக்கும். சந்தேகப்படும் படியான பைல்களையும், பாதிக்கப்பட்ட பைல்களையும் பட்டியலிட்டுக் காட்டும். இவற்றை நீக்கவா என்ற கேள்வியும் கேட்கப்படும். இவற்றை நீக்குவதே நல்லது.

#6

#6

இவை நீக்கப்பட்டவுடன் மால்வேர் பைட்ஸ் உங்கள் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குமாறு கேட்கும். ஓகே கிளிக் செய்து இயக்கவும். மால்வேர் புரோகிராம்கள் நீக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மறுபடியும் இயங்கத் தொடங்கியவுடன், வழக்கமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரின் அனைத்து ட்ரைவ்களையும் சோதனை செய்திடவும்.

#7

#7

மால்வேர் தொகுப்புகள், விண்டோஸ் சிஸ்டம் பைல்களைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நம் பிரவுசரில் மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர்ந்து கம்ப்யூட்டரில் இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் நுழைந்திட வழி வகுக்கின்றன. எனவே அடுத்த இணைய இணைப்புக்கு முன்னர், பிரவுசரின் அனைத்து செட்டிங்கு களையும் ஒருமுறை சோதனை செய்து பார்த்துவிடுவது நல்லது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X