உங்கள் கணினியிலுள்ள டூப்ளிகேட் ஃபைல்களை நீக்குவது எப்படி?

கணினியுள்ள டூப்ளிகேட் பைல்களை நீக்குவது எப்படி என்பது குறித்த தகவல்கள் கீழே.

By Ilamparidi
|

நமது வீடுகளிலோ அல்லது அலுவலகங்களிலோ நாம் பயன்படுத்தக்கூடிய கணினியில் தேவையற்ற பைல்கள் அதிகப்படியான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கணினியையும் விரைவாக இயங்க விடாமல் அதன் செயல்பாட்டினை சீர்குலைப்பதத்தோடு மட்டுமல்லாமல் நமக்கு தேவையான நேரத்தில் தேவையான பைல்களை கண்டறிவதற்கும் இடையூறாக இருக்கும்.

அவ்வாறு,நமது கணினியிலுள்ள தேவையற்ற டூப்ளிகேட் பைல்களை எவ்வாறு நீக்குவது என்பது குறித்த தகவல்களும் அதற்கு தேவையான ஆப்ஸ்கள் குறித்த தகவல்களும் கீழே.

டீப்குரு:

டீப்குரு:

இந்த ஆப்பினை நமது செயலியில் இன்ஸ்டால் செய்துகொண்டு அதன் வழியாக நாம் நமக்கு தேவையற்ற மற்றும் கணினியின் துரித செயல்பாட்டினைத் தடுக்கிற ஃபைல்கள் மற்றும் போல்டர்கள் ஆகியவற்றினை நீக்கலாம்.
மேலும் இந்த ஆப் ஆங்கிலம்,பிரெஞ்சு,ஜெர்மன் மற்றும் சீன மொழிகளில் உள்ளதால் பயன்படுத்துவதற்கும் எளிதாகவும் இருக்கும்.நீங்கள் போல்டரினைத் தேர்ந்தெடுத்தால் போதும் அதிலுள்ள தேவையற்ற ஃபைல்களை நமக்கு இந்த ஆப் காட்டும்.அவற்றை நாம் டெலீட் செய்து கொள்ளலாம்.

டூப்ளிகேட் பைல் பைண்டர்:

டூப்ளிகேட் பைல் பைண்டர்:

இந்த ஆப்பும் நமது கணினியிலுள்ள போலியான பைல்களை கண்டறிய உதவும்.மேலும் இது அதிகப்படியான அளவுள்ள பைல்களை ஆய்வு செய்து அதிலுள்ள தேவையற்ற பைல்களைக் கண்டறிய உதவும்.

செர்ச் மை ஃபைல்ஸ்:

செர்ச் மை ஃபைல்ஸ்:

இந்த ஆப்பின் வழியே நமது கணினியிலுள்ள விரும்பத்தகாத மற்றும் தேவையற்ற பைல்களை நாம் கண்டறிந்து எளிதில் நீக்கலாம்.அதிகப்படியான தேவையற்ற பைல்களையும் இந்த ஆப்பின் வழியாக நீக்க இயலும்.மேலும்,இதனை உங்கள் யுஎஸ்பி யிலுள்ள விரும்பத்தகாதவனவற்றையும் நம்மால் நீக்க இயலும்.

விசிபிக்ஸ்:

விசிபிக்ஸ்:

இந்த ஆப்பின் வழியே நாம் ஏதேனும் ஓர் குறிப்பிட்ட பைலைத் தேர்ந்தெடுத்து அதில் அதற்கு தொடர்பில்லாதவற்றினை நம்மால் கண்டறிந்து நீக்க இயலும்.

சிகிளீனர்:

சிகிளீனர்:

இந்த செயலியே பெரும்பாலான வடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்ற ஒன்று.சி டிரைவ்விலுள்ள ஜங்க் பைல்ஸ் உள்ளிட்டவற்றை நீக்கவும் செய்யலாம்.மேலும் இந்த செயலியில் தேவையற்ற பைல்களை நீக்க டூல்ஸ் பகுதிக்கு சென்று பைன்ட் அன்வாண்டேட் பைல்ஸ் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து நாம் விரும்பத்ததாகவற்றை எளிதா நீக்கிக்கொள்ளலாம்.மேலும் இது கணினியில் பயன்படுத்துவதற்கு ஏற்றது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.?

Best Mobiles in India

English summary
How to remove duplicate files from a Windows PC.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X