ஸ்கைப்பில் அதிகரிக்கும் ஹேக்கர்கள்...!

Written By:

இன்றைக்கு ஸ்கைப்பானது(Skype) நிச்சயம் நம் அனைவரின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் பெர்சனல் கம்பியூட்டர்களில் இருக்கும் எனலாம்.

இன்றைக்கு அனைவரும் பயன்படுத்தும் இந்த ஸ்கைப்பை இன்டர்நெட் ஹேக்கர்களும் தவறாது பயன்படுத்தி வருகின்றனர் தற்போது.

மேலும், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பி விடும் ஹேக்கர்கள், இப்போது ஸ்கைப் புரோகிராமின் ஒரு வசதியை இதற்கெனப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

ஸ்கைப் புரோகிராமின் இன்ஸ்டண்ட் மெசேஜில் Hi...How are you??? என செய்தி வந்து, அதனைக் கிளிக் செய்தால், நீங்கள் செய்வதறியாமல், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டருக்கு வெத்தலை பாக்குடன் வரவேற்பு தந்துவிட்டீர்கள் என்றாகிறது.

ஸ்கைப்பில் அதிகரிக்கும் ஹேக்கர்கள்...!

இதன் மூலம் ஹேக்கர்கள் அந்த பெர்சனல் கம்ப்யூட்டரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

இதனால் உங்களின் ஸ்கைப் அக்கவுன்ட்டில் சற்று பாதுகாப்பாக இயக்குங்கள் புதியவர்கள் யாரேணும் உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தால் அவர்களிடம் பேச்சு கொடுக்காதீர்கள்.

பெரும்பாலும் அவைகள் பெண்களின் பெயரிலேயே வந்து உங்களை தொடர்பு கொள்ளுவார்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்