நோ சொன்ன கூகுள்...!

Written By:

இன்றைக்கு நாம் அதிகம் பயன்படுத்தும் குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பயன்படுத்த கூகுள் தடைவிதித்துள்ளது.

கூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து இறக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே குரோம் பிரவுசர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தடையினை குரோம் உருவாக்கியுள்ளது.

இந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தன்னுடைய புதிய யூசர் இண்டர்பேஸ் டூல்களைத் தன்னுடைய வெப் ஸ்டோரிலிருந்து மட்டுமே இறக்கிப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்ததைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம் இத்தகைய செயல்பாட்டில் இறங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், கூகுள் தன் பிரவுசரில் இயங்கும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க முடியும்.

நோ சொன்ன கூகுள்...!

பல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பிரவுசரின் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றி, திருட்டுத்தனமாக தகவல்களைத் திருடும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகின்றன.

இது போன்ற தீய நடவடிக்கைகளை உள்ளாறக் கொண்டிருக்கும் புரோகிராம்களை, கூகுள் இனிக் கண்டறிந்து, தன் ஸ்டோரில் அனுமதிக்காமல் ஒதுக்கித் தள்ளும். பயனாளர்கள் இதனால் பாதுகாப்பான நிலையில் இயங்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்