ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனை அறிவித்தது கூகுள்....!

By Keerthi
|

சில வாரங்களுக்கு ஆப்பிள் Worldwide Developer Conference(WWDC 14) என்ற ஒன்றை நடத்தி ஐ.ஓ.எஸ் 8(ios 8) முதலியவற்றை வெளியிட்டு அசத்தியது.

தற்போது அதேபோல் கூகுளும் தனது பங்குக்கு Developer Conference ஒன்றை நேற்று அமெரிக்காவில் நடத்தியது.

இந்த கான்பரன்ஸை தலைமை ஏற்று நடத்தி வைத்தது இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கூகுளின் வைஸ் பிரஸிடேண்ட் திரு.சுந்தர் பிச்சை ஆவர்.

இந்த மாநாட்டில் பல முக்கிய தகவல்களை இவர் வெளியிட்டார் இதுவரை உலக அளவில் 100 கோடி ஆண்ட்ராய்டு சாதனங்கள் இயங்கி கொண்டிருக்கின்றன என்று இவர் தெரிவித்தார் ஆண்ட்ராய்டு கூகுளின் ப்ராடக்ட் என்பது நாம் அறிந்ததே.

இதோ மேலும் அந்த மாநாட்டில் நடைபெற்ற சில அறிவிப்புகள் மற்றும் சிறப்பு தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்....

#1

#1

இந்த கான்பிரன்ஸில் முக்கியமாக அறிவிக்கப்பட்டது ஆண்ட்ராய்டு டி.லி பற்றிதான் விரைவில் இது விற்பனைக்கு வர இருக்கின்றது

#2

#2

இந்த ஆண்ட்ராய்டு டி.வி யை நமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலமாகவும் இயக்கலாம்

#3

#3

அடுத்து 100 கோடி சாதனங்கள் உலகளவில் ஆண்ட்ராய்டு மூலம் இயங்குவதாக கூகுள் அறிவித்தது

#4

#4

கான்பிரன்ஸூக்கு வந்தவர்களில் பலர் இதுபோல கூகுள் கிளாஸ் உடனே வந்தனர்

#5

#5

சாம்சங் வெளியிடும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச் பற்றி இதில் அறிவித்தது கூகுள்

#6

#6

மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ எனப்படும் ஆண்ட்ராய்டின் மூலம் இயங்கும் கார் பற்றியும் கூகுள் கூறியிருந்தது இந்த கார் தற்போது சோதனை ஓட்டத்தில் இருப்பதாக கூகுள் கூறியது

#7

#7

லேட்டஸ்ட்டாக வெளிவந்த கிட்கேட்டுக்கு அடுத்து ஆண்ட்ராய்டு L என்ற வெர்ஷனை கூகுள் விரைவில் வெளியிட இருக்கின்றது

#8

#8

குரோம்புக் பயன்படுத்துவோர் இனி அதில் ஆண்ட்ராய்டு ஆப்ஸையும் பயன்படுத்தலாம்

#9

#9

மோட்டோரோலா வெளியிடும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச்சான மோட்டோ 360 பற்றியும் இங்கு விவாதிக்கப்பட்டது

#10

#10

இந்த கான்பிரன்ஸில் மொத்தம் 6000 சாப்ட்வேர் டெவலப்பர்கள் உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டணர்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X