கூகுளின் அசத்தும் கூகுள் ட்ரைவ்...!

By Keerthi
|

இன்றைக்கு இணைய அரசனான கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும்.

இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

கூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம்.

இதற்கான ஒரே தேவை, நீங்கள் கூகுள் தரும் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.

கூகுளின் அசத்தும் கூகுள் ட்ரைவ்...!

அடுத்து drive.google.com என்ற இணைய தளம் செல்லவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், "More" என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். அடுத்து "Offline" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த பட்டனில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டர், இணைய இணைப்பு இல்லாமலேயே, கூகுள் ட்ரைவ் பைல்களை இயக்க செட் செய்யப்பட்டுவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், இதனை செட் செய்தால் தான், கூகுள் ட்ரைவ் இணைய இணைப்பின்றி கிடைக்கும். ஆனால், கூகுள் குரோம் புக் பயன்படுத்தினால், மாறா நிலையில் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வகையில் அது செட் செய்யப்பட்டே கிடைக்கிறது.

இணைய இணைப்பு இல்லாமல், கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வசதியுடன், உங்கள் ஹார்ட் ட்ரைவுடன், கூகுள் ட்ரைவ் இணைக்கும் வசதியும் கிடைக்கிறது. கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இணைப்பினை எளிதாக அமைக்கலாம்.

இதன் மூலம், நீங்கள் கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்துள்ள எந்த பைலையும், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். மேலும், கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இடையே, எந்த பைலையும் இழுத்து வந்து இடம் மாற்றலாம்.

மேலே சொல்லப்பட்ட ட்ரைவ் + கம்ப்யூட்டர் இணைப்பு, ட்ரைவில் உள்ள பைல்களை உங்கள் ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. ஆனால், கூகுள் டாக்ஸ் (Google Docs) பயன்படுத்தி உருவாக்கப்படும் டாகுமெண்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட்களை அவ்வாறு காண்பது எளிதல்ல.

அந்த பைல்கள் கூகுள் டாக்ஸ் பார்மட்டில் தான் சேவ் செய்யப்படும். அந்நிலையில், அவற்றை நம்முடைய லோக்கல் வேர்ட் ப்ராசசர் அல்லது எடிட்டரில் திறந்து மாற்றங்கள் செய்திட முடியாது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X