விண்டோஸில் சில சர்ச் ஆப்ஷன்கள்...!

Written By:

இன்று கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் தேடல்களை ஒரு சிலவற்றில் அடக்கிவிடலாம். ஒரே மாதிரியான தேடல்களை மேற்கொண்டு, கம்ப்யூட்டரில் பைல்களைப் பெற்று தங்கள் பணியைத் தொடர்வார்கள்.

இவர்கள் ஒவ்வொரு நாளும் தேடலுக்கான சொற்களை டைப் செய்திடாமல், தேடல் சொற்களைப் பதிவு செய்து அவற்றை மீண்டும் பெற்று, கிளிக் செய்து தேடும் வசதி விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ளது.

முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கவும். இதற்கு Start>Computer எனச் செல்லலாம்; அல்லது Windows Explorer என ஸ்டார்ட் பட்டன் மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் டைப் செய்திடலாம்.

விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவின் மேல் வலது பக்கத்தில், ஒரு கட்டம் இருப்பதனைக் காணலாம். இங்கு நீங்கள் தேட விரும்பும் வகைக்கான சொல்லை டைப் செய்திடலாம்.

எடுத்துக்காட்டாக, நான் jpeg என டைப் செய்து, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து jpeg பைல்களையும் பெற்றேன். இதைப் போல நீங்கள் தேட விரும்பும் எதனையும் கொடுக்கலாம்.

விண்டோஸில் சில சர்ச் ஆப்ஷன்கள்...!

நீங்கள் கொடுத்த சொல்லுக்கான தகவல்கள் மேலே கிடைத்தவுடன், Save search பட்டனைக் கிளிக் செய்திடவும். இது விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவின் இடது பக்கம் இருக்கும்.

இப்போது இன்னொரு விண்டோ காட்டப்படும். இதில் நீங்கள் சேவ் செய்திட விரும்பும் தேடலைப் பதிவு செய்திட பெயர் ஒன்று கொடுக்கச் சொல்லி கேட்கும்.

பெயரைக் கொடுத்த பின்னர், Save பட்டனை அழுத்தவும். இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இடது பக்கத்தில் உள்ள பிரிவில், உங்கள் தேடல் பதியப்பட்டு கிடைக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்