பேஸ்புக் மார்குக்கு இன்று பிறந்தநாள்...!

Written By:

இன்றைக்கு இணையத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தளம் எது என்றால் அது பேஸ்புக் தான்.

மார்க் ஜுக்கர்பெர்க் இவர் தான் இன்று நாம் பயன்படுத்தும் பேஸ்புக்கின் உருவாக்கியவர் இது நிச்சயம் நம் அனைவருக்கும் தெரியும் எனலாம்,இவர் 1984 மே 14 ல் அமெரிக்காவின் நியூயார்கில் உள்ள டாப்ஸ் பெர்ரி என்னும் இடத்தில் பிறந்தார்.

இன்றுடன் இவருக்கு 30 வயது தான் ஆனால் உலகை தன் கைப்பிடியில் வைத்திருக்கறார் என்று கூறலாம்.

இவர் 2004 ல் திபேஸ்புக்.காம் என்ற இணையத்தை விளையாட்டாகவே முதலில் தொடங்கினார்,ஆனால் அது அப்போது போதிய வரவேற்பை பெறவில்லை.
பின்னர், 2005 ல் அதில் சில மாற்றங்களை செய்து பேஸ்புக் என்னும் இணையத்தை கொண்டு வந்தார் இது மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரிடமும் பேஸ்புக் மிகவும் பிரபலமானது, இதன் மூலம் பேஸ்புக் அசுர வளர்ச்சி கண்டது.

பேஸ்புக் மார்குக்கு இன்று பிறந்தநாள்...!

இன்று பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அக்டோபர் 2012 ஒரு மாதத்தில் மட்டும் 100 கோடி யூஸர் அக்கவுண்ட்களை பெற்று சாதனை படைத்தது பேஸ்புக்.

இதனால் கூகுள் இதனை வாங்க முடிவெடுத்து எவ்வளவு பில்லியன் டாலர்களையும் கொடுக்க தயாராக இருந்தது, ஆனால் மார்க் ஜுக்கர்பெர்க் இதை விற்க மறுத்துவிட்டார்.

இதனால் தான் இன்று பேஸ்புக் கூகுளுடன் போட்டி போட்டுக் கொண்டு நிற்கிறது மேலும் விரைவில் இது கூகுளை தாண்டிச் செல்லும் என்று உறுதியாக கூறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்