பேஸ்புக்கின் ஆயுட்காலம் இதுதான்...!

By Keerthi
|

நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக் ஒரு சமூக நோய் என அண்மையில் இது குறித்து ஆய்வு நடத்தியதில் இது கண்டறியப்பட்டுள்ளது.

இன்னும் 5 ஆண்டுகளில் பேஸ்புக் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

எப்போதும் ஸ்டேட்டஸ் போட்டு, தங்கள் போட்டோக்களை அப்லோட் செய்து, நண்பர்களின் சொத்தைக் கருத்துக்களுக்கெல்லாம் லைக் போட்டு, தான் போட்ட ஸ்டேட்டஸுக்கு எத்தனை லைக் மற்றும் ஷேரிங் வந்துள்ளது என்று அடிக்கடி பேஸ்புக் வீட்டில் சுழன்று வருவோருக்கு இந்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியத்தைத் தந்துள்ளன.

சிலரோ, இது என்ன முட்டாள்தனமான முடிவாக உள்ளது. இதற்கு அடிப்படையே இல்லை; சிலர் விலகினாலும், பலர் இதில் ஐக்கியமாவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வு என்னதான் சொல்கிறது என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பேஸ்புக் வேகமாகப் பரவி வரும் தொற்று நோய் போல நம்மைச் சூழ்ந்துள்ளதாக, புள்ளிவிபரங்களுடன் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ப்ளு காய்ச்சல் வேகமாகப் பரவிய போது, கூகுள் ஒரு சேவையைத் தொடங்கியது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பேஸ்புக்கின் ஆயுட்காலம் இதுதான்...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இதனால் பாதித்தவர்களும், பாதித்தால் என்ன செய்வது என்று பயந்தவர்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க எண்ணியவர்களும், தகவல்களைத் தெரிந்துதான் வைப் போமே என்று நினைத்தவர்களும், மொத்தம் மொத்தமாக இந்த சேவை கேட்டுத் தங்கள் பெயர்களைப் பதிந்தனர்.

தங்கள் அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சேவை அந்த நோயின் ஒரு பகுதியாகவே மாறியது. இந்த சேவை தளம் மூலமாகவே, இந்நோய் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இது எப்படி ஒரு நோய் வேகமாகப் பரவிப் பின் தொய்வடைகிறதோ, அதே போல பேஸ்புக்கின் நிலையும் இருக்கும் என்று பல எடுத்துக் காட்டுகளுடன் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. டிசம்பர் 2012ல் தான், பேஸ்புக் இணைய தளம், மிக அதிகமான அளவில், புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றது.

தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளே இருக்கும். 2015 முதல் 2017 ஆம் ஆண்டு காலத்தில், வாடிக்கையாளர்கள் இதனை விட்டு விலகத் தொடங்குவார்கள் என்று உறுதியாக இந்த ஆய்வு முடிவினை அறிவித்துள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X