இனி பேஸ்புக் தான் நெம்பர் 1...!

Written By:

இன்றைக்கு வாட்ஸ் அப்பை வாங்கியதன் மூலம் இன்று அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முதல் தொலைதொடர்பு நிறுவனமாக, பேஸ்புக் இடம் பெறுகிறது.

இந்த வகையில் இதுவரை இருந்து வந்த மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

மேலும், தற்போது மெசேஜ் மற்றும் போட்டோ பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் செயலியில் வசதி உள்ளது. இனி, வாய்ஸ் பகிர்வும் இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்பிடம் உலக அளவில், 50 கோடி போன் எண்கள் உள்ளன. அத்துடன் இவை, இணையத்தில் எந்த இடத்தில் உள்ளன என்ற தகவலையும் வாட்ஸ் அப் வைத்துள்ளது.

இனி பேஸ்புக் தான் நெம்பர் 1...!

இந்த அளவிற்கு வழக்கமான தொலைபேசிகள் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்தாலும், வாட்ஸ் அப் இந்த தொலைபேசி பயன்பாட்டிற்கு எந்த நிறுவுதல் கட்டணமோ, செயல்படுத்துவதற்கான கட்டணமோ வாங்குவதில்லை என்பது இதன் சிறப்பு.

இதனை மைக்ரோசாப்ட், தான் வாங்கிய ஸ்கைப் வசதியுடன் சாதித்திருக்க முடியும். கூகுள் நிறுவனமும் தன் கூகுள் வாய்ஸ் மூலம் இதனை மேற்கொண்டிருக்க முடியும். ஏன், பேஸ்புக் இதனை அடைய முன்பே அதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் இவற்றால் இயலவில்லை. என்ன காரணம்?

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் தொலைபேசி எண்கள்,ஒரு நிறுவனத்திடன் வரக் காரணம், ஸ்மார்ட்போன்களும் இணையமும் இணைந்ததுதான்.

போன்கள் போன்களாகவும், கம்ப்யூட்டர்கள் டெஸ்க்டாப்புடன் இணைந்ததாகவும், தனித்தனியே இருக்கையில், தொலை தொடர்பு விரிவாக இல்லை. ஸ்கைப் மற்றும் மொபைல் போன்களில் கிடைக்கும் தொலை தொடர்பு வசதிகளில் பெருத்த இடைவெளி இருந்தது.

ஸ்மார்ட் போன்கள் வரத் தொடங்கிய போது, இணைய கட்டணம் மிக அதிகமாக இருந்தது. எனவே, இரண்டிற்கும் இடையே வேறுபாடு இருந்தது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இந்த வேறுபாடு களையப்பட்டு, இரண்டும் இணைவாக இணைந்து புரட்சியை ஏற்படுத்தின. இதில், தற்போது ஏற்பட்டுள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இணைப்பு சரியான தருணத்தில் உருவாகி, பேஸ்புக் நிறுவனத்திற்கு முதல் இடத்தைத் தந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்