பேஸ்புக் வேகமாக வளருகின்றது இந்தியாவில்...!

Written By:

இன்றைக்கு கம்பியூட்டரை ஆன் செய்தவுடன் நாம் செல்லும் முதல் தளம் எது என்றால் அது பேஸ்புக் தான்.

மேலும் இன்றைக்கு பேஸ்புக் சமூக வலைதளத்தில் இணைந்த இந்தியர்களின் எண்ணிக்கை, 27 கோடியாக அதிகரித்துள்ளது.

இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 15 கோடியாக இருந்தது தற்போது மிகவும் வேகமாக இது இந்தியாவில் வளர்ந்து வருகின்றது

உலக அளவில், இணையதளம் பயன்படுத்துவதில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்தியாவில், அலைபேசி, கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பேஸ்புக் வேகமாக வளருகின்றது இந்தியாவில்...!

இதனால், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், பேஸ்புக் வலைதளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில், இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பர சந்தை ஆண்டுக்கு, 38 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

இதனாலே இன்றைக்கு பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்யவே பெரும் நிறுவனங்கள் விரும்புகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்