Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஸ்கல்கேண்டி ஸ்பீக்கருடன் வரும் டெல் லேப்டாப்புகள்!

Updated: Tuesday, July 24, 2012, 16:08 [IST]

dell inspiron 15r special edition laptops

டெல் நிறுவனத்தின் இன்ஸ்பைரான 15ஆர் லேப்டாப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான லேப்டாப்புகள் ஆகும். இந்த இன்ஸ்பைரான் லேப்டாப்புகள் பிரபலமானதைத் தொடர்ந்து இந்த லேப்டாப் வரிசையில் சிறப்பு லேப்டாப்புகளைக் களமிறக்க இருக்கிறது டெல் நிறுவனம்.

இந்த புதிய இன்ஸ்பைரான சிறப்பு லேப்டாப்புகள் ஐவி பிரிட்ஜ் சிபியு மற்றும் ஸ்கல்கேண்டி மற்றும் மேக்ஸ் ஆடியோ அக்சஸரிகளைக் கொண்டு வரும். அதனால் இந்த லேப்டாப்புகள் தாறுமாறான வேகம் கொண்டிருக்கும். அதே நேரத்தில் இதில் இருக்கும் ஆடியோவும் பக்காவாக இருக்கும்.

இந்த லேப்டாப்புகளில் இருக்கும் இன்டல் கோர் ஐ5-3210எம் ப்ராசஸர் மிக வேகமாக இயங்கும் தன்மை கொண்டது. மேலும் இந்த லேப்டாப்புகள் டர்போ பூஸ்ட் வசதிகளுடன் வருவதால் இவை எந்த வேலையையும் மிக விரைவாக செய்து முடிக்கும். மேலும் இதில் க்ராபிக்ஸ் யூனிட் உள்ளதால் இந்த லேப்டாப்புகள் சுவிட்சபுள் க்ராபிக்ஸை சப்போர்ட் செய்யும். அதனால் க்ராபிக்ஸ் வேலைகளையும் இந்த லேப்டாப்புகளில் மிக அருமையாகச் செய்ய முடியும்.

இந்த லேப்டாப்புகளை தூசுகள் தாக்காதவாறு அதற்கான தடுப்பு வசதியுடன் டெல் களமிறக்குகிறது. மேலும் இந்த லேப்டாப்பில் 1டிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் எஎம்டி ரேடியோன் எச்டி 7730எம் க்ராபிக்ஸ் வசதிகள் உள்ளன. அதோடு இந்த லேப்டப்புகளில் டெல்லின் ஸ்டேஜ் அப்ளிகேசன் உள்ளதால் இவற்றில் வீடியோ பார்ப்பது மற்றும் விளையாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவித்து ரசிக்கலாம்.

இந்த லேப்டாப்புகளில் டேட்டா சேப், லோக்கல் பேக்கப், ஸ்டேஜ் ரிமோட், டெல் வெப்காம், ஆபிஸ் 2010 ஸ்டார்ட்டர் எடிசன் மற்றும் எக்ஸ்பிஎஸ் வியூவர் போன்ற பல சாப்ட்வேர்களும் உள்ளன.

இதன் பேட்டரி இந்த லேப்டாப்பிற்கு 2 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த இன்ஸ்பைரன் லேப்டாப்புகள் ரூ.51,000க்கு விற்கப்பட இருக்கின்றன. ஸ்கல் கேண்டி ப்ரான்டட் ஸ்பீக்கர்கள் இல்லாமல் இந்த லேப்டாப்பை ரூ.43,000க்கு வாங்கலாம்.

Story first published:  Tuesday, July 24, 2012, 16:08 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll