Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விண்டோஸ் டேப்லெட்டைக் களமிறக்கும் ஆசஸ்!

Updated: Tuesday, July 24, 2012, 16:06 [IST]

asus windows tablet 600
வரும் அக்டோபரில் விண்டோஸ் 8 இயங்கு தளம் களமிறங்க இருக்கிறது. எனவே அக்டோபருக்குப் பிறகு ஏராளமான விண்டோஸ் டேப்லெட்டுகள் படையெடுத்து வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய எதிர்பார்க்கப்படும் வரிசையில் ஆசஸின் விண்டோஸ் டேப்லெட் 600ம் அடக்கமாயிருக்கிறது. ஆம், மிகவும் சூப்பரான டிசைனில் வரும் இந்த ஆசஸ் விண்டோஸ் டேப்லெட் 600 விண்டோஸ் இயங்கு தளத்துடன் வர இருக்கிறது.

இந்த டேப்லெட்டின் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயில் சூப்பர் ஐபிஎஸ்+ தொழில் நுட்பம் உள்ளது. அதனால் இதன் ரிசலூசன் மிகத் துல்லியமாக இருக்கும். அதே நேரத்தில் இந்த டிஸ்ப்ளே மல்டி டச் வசதி கொண்டது. அதுபோல் இதன் கீபோர்ட் க்வெர்டி வசதியைக் கொண்டது.

சாதாரண சேமிப்பு வசதியுடன் வரும் இந்த டேப்லெட்டின் சேமிப்பை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். மேலும் இதில் இஎம்எம்சி ப்ளாஷ் சேமிப்பையும் மேற்கொள்ள முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் யுஎஸ்பி, ப்ளூடூத் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளதால் இதில் மிகவும் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

இந்த ஆசஸ் டேப்லெட் க்வாட் கோர் டேக்ரா 3 எஸ்ஒசி மற்றும் 2ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இதன் வேகமும் மிக அதிகமாக இருக்கும். அதுபோல் இதில் இருக்கும் என்விடியா 12 கோர் ஜிபியு சூப்பாரன விளையாட்டு அனுபவத்தை அளிக்கும். மேலும் இந்த டேப்லெட் எ-ஜிபிஎஸ் வசதியுடனும் வருகிறது.

இந்த டேப்லெட் பின்பக்கம் 8எம்பி கேமராவுடன் வருகிறது. இந்த கேமரா ஆட்டோ போக்கஸ் மற்றும் ஆப்டிக்கல் சூம் வசதியைக் கொண்டது. மேலும் இதில் எல்இடி ப்ளாஷ் வசதியும் உள்ளது. இதன் பேட்டரி இந்த டேப்லெட்டிற்கு நீடித்த இயங்கு நேரத்தையும் வழங்குகிறது.

இந்த புதிய ஆசஸ் டேப்லெட் வரும் அக்டோபரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை.

Story first published:  Tuesday, July 24, 2012, 16:06 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll