Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

குழந்தைகளை குதுகலப்படுத்தும் ஆர்க்கோஸ் சைல்டுபேட்!

Updated: Friday, June 1, 2012, 10:42 [IST]

archos 7 inch child pad with ics now on sale for 130 aaaalvin squeaks in celebration

ஆர்க்கோஸ் நிறுவனம் குழந்தைளுக்கான சைட்பேடட் டேப்லெட்டைக் களமிறக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அறிவிப்பு வந்ததிலிருந்து இந்த டேப்லெட்டிற்கு உலக அளவில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவும் வகையில் இந்த புதிய குழந்தைகள் பொழுதுபோக்கு டேப்லெட் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த குழந்தைகள் சாதனம் 129.99 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதோடு இந்த சாதனம் எப்சிசியின் சிறப்பு தணிக்கைக்குப் பிறகு விற்பனைக்கு வருவதால் இதன் தரத்தைப் பற்றி கேள்வி கேட்க முடியாது. அந்த அளவிற்கு உறுதியாகவும் தரமாகவும் இந்த சாதனம் இருக்கும் என நம்பலாம்.

இந்த குழந்தைகள் சாதனம் 7 இன்ச் திரை, ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளம், 1ஜி ஹெர்ட்ஸ் எஆர்எம் கோர்ட்டெக்ஸ் எ8 சிபியு, 1ஜிபி ரேம், விரிவுபடுத்தக்கூடிய வசதியுடன் கூடிய 4ஜிபி சேமிப்பு போன்ற வசதிகளை தாங்கி வருகிறது.

மேலும் இந்த சாதனத்தில் குழந்தைகள் அதிகம் விரும்பும் பல பிரபலமான விளையாட்டுகளை பதிவு செய்து வைத்திருக்கிறது. அதனால் இந்த குழந்தைகள் டேப்லெட் சாதனம் குழந்தைகளின் சொர்க்கபுரியாக இருக்கும் என்று நம்பலாம்.

Story first published:  Friday, June 1, 2012, 10:42 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll