
இதில் உயர்ந்த தொழில் நுட்பத்தினை பெறலாம் என்று தாராளமாக கூறலாம். ஏனெனில் இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
இதன் 7 இஞ்ச் திரையின் மூலம் தேவையான தகவல்களை தெளிவாக பார்க்கலாம். இந்த திரை 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.
மல்டி தொடுதிரை வசதியினை வழங்கும் இந்த டேப்லட்டில் சிறப்பான மெமரி வசதியையும் பெறலாம். இதில் 32 ஜிபி வரை மெமரி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏஞ்சல் பேட் டேப்லட்டின் விலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்த டேப்லட் ஆகாஷ்-2 டேப்லட்டையும் விட குறைந்த விலை கொண்டது.
இந்தியாவில் இந்த டேப்லட் வெளியாவது பற்றி எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை. இந்த டேப்லட்டினை ரூ.2,200 விலையில் பெறலாம். ஏஞ்சல் டேப்லட்டினை வலைத்தளத்தின் மூலம் பெறலாம்.






























