உலகையே மாற்றிய கம்ப்யூட்டர்கள் இவை தான்.!!

Written By:

பிரபல புகைப்பட கலைஞரான ஜேம்ஸ் பால் உலகின் பழமை வாய்ந்த கம்ப்யூட்டர்களை மறுஉருவாக்கம் செய்ய நினைத்தார். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பழைய கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்களோடு அவை இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை படமாக்கத் துவங்கினார்.

பல்வேறு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த உலகையே மாற்றிய கம்ப்யூட்டர்களின் அழகிய புகைப்படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1950 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டரின் மொத்த எடை சுமார் 2.8 டன் ஆகும். தற்சமயம் தேசிய கணினி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உலகளவில் இயங்கும் மிகவும் பழைய டிஜிட்டல் கம்ப்யூட்டர் என்ற பெருமைக்காக 2013 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இரண்டாவது முறையாக இடம் பிடித்திருக்கின்றது.

ஐக்கிய ராச்சியத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கம்ப்யூட்டர் தான் தி பைலட் ஏஸ். 1950களின் துவக்கத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கணினியில் மொத்தம் 800 வாக்யூம் டியூப்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை அலான் டியூரிங் என்பவர் வடிவமைத்தார்.

1959 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தி ஐபிஎம் 1401 வேரியபில் வொர்டு லென்த் டிசிமல் கம்ப்யூட்டர் ஆகும். இந்த மாடலில் மட்டும் சுமார் 12,000 கருவிகள் தயாரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

1950-1960களில் உருவாக்கப்பட்ட ஐபிஎம் 729 காந்த டேப் மூலம் தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டிருந்தது. இது ஐபிஎம் 7 டிராக் வகையைச் சேர்ந்த டேப்களை பயன்படுத்தியது. மொத்தம் சுமார் 2400 அடி அதாவது 731 மீட்டர் நீளம் கொண்ட காந்த டேப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.

1960களின் துவக்கத்தில் வடிவமைக்கப்பட்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தான் இஏஐ பேஸ். 4அடி அகலம் மற்றும் 2அடி உயரமாக இருந்த இந்த மாடலின் எடை சுமார் 145-192 கிலோ வரை இருந்தது. அப்போலோ திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதோடு அந்தச் சமயத்தில் இது முழுமையான டெஸ்க்டாப் அனலாக் கம்ப்யூட்டராக இருந்தது.

ஆங்கிலத்தில் CDC 6600 என அழைக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டர் உலகின் வெற்றிகரமான சூப்பர் கம்ப்யூட்டர் ஆகும். 1964-1969 ஆண்டு காலகட்டத்தில் உலகின் அதிவேக கம்ப்யூட்டராக இது இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு வடிவமைத்து, தயாரித்த அனலாக் கம்ப்யூட்டர் தான் என்டிம் 2000. மொத்தம் 20 கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட்டது, இதில் இன்றும் இயங்கும் நிலையில் இருக்கும் கம்ப்யூட்டர் டெக்னீஷி சம்லுன்கன் டிரெஸ்டனில் வைக்கப்பட்டுள்ளது.

செக்கோசிலோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட கடைசி அனலாக் ஹைப்ரிட் கம்ப்யூட்டர் தான் மெடா 42டிஏ. 1970களில் வடிவமைக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டர் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டது.

எச்டிஆர் 75 சிறிய அனலாக் ஹைப்ரிட் கம்ப்யூட்டர் ஆகும். இது டிரெஸ்டன் பல்கலைக்கழகத்தில் வடிவமைக்கப்பட்டது.

1970களில் வடிவமைக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டர் ஐக்கிய ராச்சியத்தை சேர்ந்த ஐசிஎல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த வகை கம்ப்யூட்டர்கள் பணியிடங்களில் பயன்படுத்த அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
amazing photos of the computers that changed the world Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்