ஏசர் பிரிடேட்டர் 21 X:இந்த நூற்றாண்டின் அதிசய கேமிங் லேப்டாப்

21 இன்ஸ் கர்வ் டிஸ்ப்ளேவுடன் வெளிவந்துள்ள இந்த கேமிங் லேப்டாப்பை அனைவரும் அந்த மாநாட்டில் வியந்து பார்த்தனர்.

Written By:

சமீபத்தில் லாஸ் வேகஸ் நகரில் நடந்த CES 2017 டெக்னாலஜி மாநாட்டில் இதுவரை கனவிலும் நினைத்து பார்க்காத பல அற்புதமான டெக்னாலஜி சாதனங்கள் அறிமுகமாகின. அவற்றில் சில தலைப்பு செய்திகளில் இடம்பெறு அளவிற்கு முக்கியத்தும் பெற்றது. அவ்வாறு முக்கியத்துவம் பெற்ற சாதனங்களில் ஒன்றுதான் கேமிங் லேப்டாப் என்று கூறப்படும் Acer Predator 21 X.

ஏசர் பிரிடேட்டர் 21 X:இந்த நூற்றாண்டின் அதிசய கேமிங் லேப்டாப்

21 இன்ஸ் கர்வ் டிஸ்ப்ளேவுடன் வெளிவந்துள்ள இந்த கேமிங் லேப்டாப்பை அனைவரும் அந்த மாநாட்டில் வியந்து பார்த்தனர். இதில் உள்ள சிறப்பு அம்சங்களை தற்போது பார்ப்போம்

ரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்டீல் 2.!

 • 21 இன்ச் ஸ்க்ரீன் 2,560x1,080-பிக்சல் ரெசலூசன்
 • 120GHz ரெபிரெஷ் ரேட்
 • டோபிள் ஐ டிராக்கிங்
 • இண்டல்கோர் i7-7820HK சிபியூ
 • ஐந்து ஸ்டோரேஜ் டிரைவ் பயன்படுத்தும் திறன்
 • இரண்டு பவர் சப்ளை
 • ஐந்து ஃபேன்கள்
 • லேப்டாப்பை எப்போது கூலாக வைத்திருக்க ஒன்பது ஹீட் பைப்புகள்
 • HDMI போர்ட் மற்றும் இரண்டு டிஸ்ப்ளே போர்ட்டுக்கள் 
 • நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ஊஃபர்கள்
 • மெக்கானிக்கல் கீபோர்டு
 • எஸ்டி கார்டு ரீடர்
 • 8.8 கிலோ எடை

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கர்வ் டிஸ்ப்ளே மற்றும் டோபில் ஐ டிராக்கிங்:

உலகின் முதல் கர்வ் ஸ்க்ரீன் நோட்புக் இதுதான் என்ற பெருமையை இந்த ஏசர் பிரிடேட்டர் 21 X பெறுகிறது. இதனால் அனைத்து கோணங்களிலும் கேமில் உள்ள உருவங்கள் தெளிவான கலர்களில் தெரியும்.

ஐ டிராக்கிங் என்பது உங்கள் பார்வையை கண்கள் டிராக் செய்யும். நீங்கள் எதை கண்களால் தேடுகிறீர்கள் என்பதை சரியாக தேர்வு செய்து அதை உங்கள் முன் நிறுத்தும். இந்த ஐ டிராக்கிங்கை உணர்ந்து பார்த்தால்தான் இதன் அதிசயம் புரிய வரும்

இரண்டு நிவெடியா ஜிஃபோர்ஸ் GTX 1080 GPUs

நிவெடியா ஜிஃபோர்ஸ் GTX 1080 GPUs சிப்செட், மேக்ஸ்வெல் ஆர்ட்டிடெக்சர் வகையை சேர்ந்த சிப்செட். மிக மிக மெலிதான தன்மையுடய இந்த சிபசெட்டில் ஏகப்பட்ட சர்க்யூட் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இண்டல்கோர் i7-7820HK சிபியூ:

இதில் அமைந்துள்ள ஏழாவது ஜெனரேசன் சிபியூவின் பெருமையை சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது. அதிக ஸீட் மற்றும் பவர் இம்ப்ரூவர் ஆகிய இந்த சிபியூவில் அடங்கியுள்ளது.

நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ஊஃபர்கள்:

ஒரு கேம் சுவாரஸ்யமாக விளையாட வேண்டுமானால் அதற்கு கண்டிப்பாக அபாரமான மியூசிக் சிஸ்டம் இருக்க வேண்டும். எனவே மியூசிக் சிஸ்டத்திற்கு இந்த கேமிங் லேப்டாப் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

இந்த ஏசர் பிரிடேட்டர் 21 X லேப்டாப்பில் நான்கு நவீன டெக்னாலஜியுடன் கூடிய ஸ்பீக்கர்கள் மறும் இரண்டு ஊஃபர்கள் உள்ளதால் உங்களுக்கு கேமிங் மியூசிக் மிக அபாரமாக இருக்கும்

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
The Acer Predator 21 X is the all new gaming laptop from the Acer. Take a look at the standout features of the notebook here.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்