ஏசர் நிறுவனத்தின் 8 புதிய அறிமுக உபகரணங்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

ஏசர் நிறுவனத்தின் 8 புதிய அறிமுக உபகரணங்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

By Siva
|

மனித வாழ்விற்கு இன்றியமையாத பொருட்களை உற்பத்தி செய்து பெரும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை கைவசம் வைத்துள்ள நிறுவங்களில் ஒன்று ஏசர் (Acer). இந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர், டிஸ்ப்ளே, புரொஜக்டர், சர்வர், டேப்ளட்ஸ், ஸ்மார்ட்போன்கள் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இண்டர்நெட்டுக்கு தேவையான பல பொருட்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏசர் நிறுவனத்தின் 8 புதிய அறிமுக உபகரணங்களின் விலை மற்றும் சிறப்பு அம்

சமீபத்தில் ஏசர் நிறுவனத்தின் கூட்டம் ஒன்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல புதிய உபகரணங்களை அறிமுகம் செய்துள்ளது. கேம்ஸ் விளையாட்டு பிரியர்களுக்கு, மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல்வேறு புதிய உபகரணங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கேமர்ஸ், நோட்புக் ஆகியவை இவற்றில் சில. இந்த புதிய உபகரணங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

பிரிடேட்டர் ஹெலியோஸ் 300: (Predator Helios 300)

பிரிடேட்டர் ஹெலியோஸ் 300: (Predator Helios 300)

இந்த புதிய வகை கேம்ஸ் நோட்புக் மிகுந்த பவர்புல் உபகரணம். 15.6 இன்ச் மற்றும் 17.3 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 7வது தலைமுறை இண்டெல் கோர் i7 பிராஸசரை கொண்டது. மேலும் NVIDIA GeForce GTX 1060 or 1050Ti கிராபிக்ஸ் அம்சங்களை இந்த உபகரணங்கள் கொண்டது.

கேம்ஸ் பிரியர்களுக்காக டூய ஏரோபிளேட் 3D அம்சங்கள் இருப்பதால் தனி அனுபவம் கிடைகும். அதற்கேற்ற மாடலான கீபோர்டு, அதில் ஒரு மெட்டல் டாப் கவர் ஆகியவை கீபோர்ட் அதிக நாட்களுக்கு உழைக்கும் தன்மை கிடைக்கின்றது.

என்ன விலை?

என்ன விலை?

பிரிடேட்டர் ஹெலியோஸ் 30 நோட்புக் 15.6 தன்மை உள்ளது $1299 விலையில் வட அமெரிக்காவிலும், ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் €1,399 விலையிலும் சீனாவில் ¥9,999 விலையிலும் கிடைக்கின்றது

பிரிடேட்டர் டிரைட்டான் 700: 9Predator Triton 700

பிரிடேட்டர் டிரைட்டான் 700: 9Predator Triton 700

மெல்லிய அதே நேரத்தில் பவர்புல்லான ஏசர் நிறுவனத்தின் கேம்ஸ் உபகரணம் இது. அலுமினியத்தில் ஆன இது 15.6 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவில் பெஸ்ட் டெக்னாலஜியில் உருவானது.

டூயல் ஏசர் ஏரோபிளேட் 3D ஃபேன்ஸ் கொண்ட இந்த உபகரணமும் 7வது தலைமுறை இண்டெல் கோர் பிராஸசரை கொண்டது. மேலும் லேட்டஸ்ட் NVIDIAGeForce GTX 10-சீரிஸ் கிராபிக்ஸ், மற்றும் வேகமான NVMe PCIe SSDகள் ஆகியவையும் மின்னல் வேகத்தில் செயல்படும் இண்டல் தண்டர்போல்ட் 3 ஆகியவையும் இதில் உள்ளது.

மேலும் மெக்கானிக்கல் கீபோர்ட், பிரிடேட்டர் சென்ஸ் சாப்ட்வேர் மற்றும் NVIDIA G-SYN மானிட்டர் ஆகியவையும் இதில் உண்டு.

என்ன விலை?

என்ன விலை?

பிரிடேட்டர் டிரைட்டான் 700 கேம்ஸ் உபகரணம் வட அமெரிக்காவில் $2999 விலையிலும் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் €3,399 விலையிலும் கிடைக்கும்.

ஏசர் சிவிப்ட் 3: (Acer Swift 3):

ஏசர் சிவிப்ட் 3: (Acer Swift 3):

Acer Swift 3 என்ற லேப்டாப், ஸ்லிம்மாகவும், அதிநவீன டெக்னாலஜியிலும் உருவானது. மிகவும் எடை குறைந்ததாக இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது.

மேலும் இது பத்து மணி நேரம் பேட்டரி தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு. 7வது தலைமுறை இண்டல் கோர் பிராஸசர், NVIDIAGe கிராபிக்ஸ் உடன் உள்ள இந்தா லேப்டாப் 14 மற்றும் 15.6 இன்ச் FHD ஐபிஎஸ் டிஸ்ப்ளேக்களுடன் கிடைக்கின்றது.

புத்தம்புதிய மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப்: விண்டோஸ் 10.!புத்தம்புதிய மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப்: விண்டோஸ் 10.!

என்ன விலை?

என்ன விலை?

ஏசர் சிவிப்ட் 3 லேப்டாப் வட அமெரிக்காவில் $599 விலையிலும் மத்திய கிழக்கு நாடுகளில் €649 விலையிலும் சீனாவில் ¥3,999 விலையிலும் கிடைக்கும்.

ஏசர் சுவிஃப்ட் 1: (Acer Swift 1)

ஏசர் சுவிஃப்ட் 1: (Acer Swift 1)

எளிமையான அதே நேரத்தில் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் லேப்டாப். பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் இதிலும் 10 மணி நேரம் உழைக்கும் பேட்டரி உள்ளது. அல்ட்ரா வேகத்தில் செயல்படு 2x2 MIMO 802.11ac வயர்லெஸ் கனெக்டிவிட்டி மற்றும் 13.3 இன்ச் HD IPS டிஸ்ப்ளேவை கொண்டது.

என்ன விலை? ஏசர் சுவிஃப்ட் 1 மாடல் லேப்டாப் வட அமெரிக்காவில் $329 விலையிலும் மத்திய கிழக்கு நாடுகளில் €399 விலையிலும் சீனாவில் ¥3,499 விலையிலும் கிடைக்கும்.

ஆஸ்பியர் 1: (Aspire 1):

ஆஸ்பியர் 1: (Aspire 1):

ஆஸ்பியர் 1 என்னும் இந்த லேப்டாப் 1 TB ஒண்டிரைவ் ஸ்டோராஜ் உடன் 802.11 வயர்லெஸ் டெக்னாலஜியை கொண்டது. மேலும் மூன்ரு மடங்கு வேகத்தை தரும் வயர்லெஸ் டெக்னாலஜியுடன் ஒரு யூஎஸ்பி 3.0 போர்ட், இரண்டு யூஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் ஒரு HDMI போர்ட் மற்றும் எதர்நெட் ஆகியவை உள்ளது.

14 இன்ச் டிஸ்ப்ளே, இண்டல் செல்ரோன் அல்லது பெண்டியம் பிராஸசர்களுடன் 32 அல்லது 64 GB ஸ்டோரேஜ் உடன், 4GB DDR3L மெமரி உள்ளது. இண்டல் HD கிராபிக்ஸ் மற்றும் 9 மணி நேரம் செயல்படும் பேட்டரியும், உள்ள இந்த லேப்டாப் 1.65 கிலோ எடை கொண்டது.

இந்த ஆஸ்பியர் 1 லேப்டாப் வட அமெரிக்க நாடுகளில் $219 விலையிலும், மத்திய கிழக்கு நாடுகளில் €249 விலையிலும் கிடைக்கும்.

ஆஸ்பியர் 3: (Aspire 3):

ஆஸ்பியர் 3: (Aspire 3):

ஆஸ்பியர் 1 மாடலில் இருக்கும் அதே அம்சங்களை இந்த ஆஸ்பியர் 3 கொண்டிருந்தாலும் பவர் மற்றும் பூஸ்ட் அம்சங்களில் மட்டும் சில வேறுபாடுகள் உள்ளது.

14 இன்ச் அல்லது 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே, இண்டல்கோர் செல்ரோன் அல்லது பெண்டியம் பிராஸசர்களுடன் 12GB மெமரி உள்ளது. புளூலைட் டெக்னாலஜி அம்சங்கள் இதில் இருப்பதால் கண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

இந்த ஆஸ்பியர் 3 லேப்டாப் வட அமெரிக்க நாடுகளில் $299 விலையிலும், மத்திய கிழக்கு நாடுகளில் €399 விலையிலும் சீனாவில் ¥2799 விலையிலும் கிடைக்கும்.

ஆஸ்பியர் 5: (Aspire 5):

ஆஸ்பியர் 5: (Aspire 5):

கொன்சம் ஹெவியான அமைப்பு கொண்ட இந்த ஆஸ்பியர் 5 லேப்டாப், 7வது தலைமுறை இண்டல்கோர் பிராஸசர் NVIDIAGe கிராபிக்ஸ் உடன் 20 GB DDR4 2400 MHz மெமரியுடன் உருவாகியுள்ளது.

மேலும் இதில் 2TB வரை ஸ்டோரேஜை அதிகப்படுத்தி கொள்ளலாம். மல்டிமீடியா லேப்டாப் ஆன இந்த ஆஸ்பியர் 5 மாடலில் 15.6 இன்ச் HD மற்றும் FHD டிஸ்ப்ளேயுடன் ஐபிஎஸ் டெக்னாலஜியுடன் தேவையான கலர்களில் கிடைக்கின்றது.

இந்த ஆஸ்பியர் 5 மாடல் வட அமெரிக்க நாடுகளில் $449 விலையிலும், மத்திய கிழக்கு நாடுகளில் €549 விலையிலும் சீனாவில் ¥3999 விலையிலும் கிடைக்கும்.

ஆஸ்பியர் 7: (Aspire 7):

ஆஸ்பியர் 7: (Aspire 7):

டிசைனர்கள் மற்றும் புரபொசனல் நபர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆஸ்பியர் 7 மாடலில் 7வது தலைமுறை இண்டல் கோர் பிராசசர், NVIDIA GeForce GTX 1060 கிராபிக்ஸ், மற்றும் 32 GB of DDR4 2400 MHz மெமரி, மற்றும் கூடுதலாக 2 TB ஸ்டோரேஜ் ஆகியவை கிடைக்கும். இந்த ஆஸ்பியர் 7 மாடலில் HD கேமிரா மற்றும் HDR மற்றும் டாபில் ஆடியோ ஆகிய அம்சங்கள் நமக்கு நல்ல அனுபவத்தை தரும்

வேகமாக நெட்வொர்க் கனெக்டிவிட்டி 2x2 MIMO 802.11ac வயர்லெஸ் டெக்னாலஜி மற்றும் ஜிகாபிட் எதர்நெட் உள்ளது. பிரிமியன் அலுமினியத்தால் இந்த ஆஸ்பியர் 7 மாடல் லேப்டாப் 15 இன்ச் அல்லது 17 இன்ச் டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும்

மேலும் இந்த மாடல் வட அமெரிக்க நாடுகளில் $799 விலையிலும், மத்திய கிழக்கு நாடுகளில் €899 விலையிலும் சீனாவில் ¥5999 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Yesterday at Acer's next@acer global press conference in New York, the company announced a range of new devices and solutions for gamers, creators, families, students, and professionals.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X