சென்னையில் Richie Street உருவான விதம்...!

சென்னையில் இருக்கின்ற ரிச்சி ஸ்ட்ரீட் (richie street) பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இத்தகைய பெரிய ரிச்சி ஸ்ட்ரீட் எப்படி உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா.

இந்த தெரு 1970ல் ஐந்து எலக்ட்ரானிக் கடைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 500க்கும் எலக்ட்ரானிக் கடைகள் வந்து விட்டது. இந்த தெருவில் பெரிய கடைகள் முதல் சிறிய எலக்ட்ரானிக் கடைகள் வரை எண்ணற்ற கடைகள் வந்துவிட்டன.

மேலும் இங்கு மலிவான விலையில் நல்ல தரமான பல எலக்ரானிக் சாதங்கள் கிடைக்கும் . இதற்கு காரணம் இங்கு பல கடைகள் இருப்பதுதான்.

ஸ்மார்ட் போன்களுக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

கம்ப்யூட்டர்களுக்கான சாதனங்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய சந்தையாக சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட் அழைக்கப்படுகிறது.

#2

இந்த தெருவானது சென்னையில் உள்ள அண்ணாசாலையில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள யாரிடம் நீங்கள் சென்று கேட்டாலும் இந்த தெருவைப்பற்றி சொல்வார்கள். அந்த அளவுக்கு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்ப்பதில் புகழ்ப்பெற்று விளங்குகிறது.

#3

இப்பொழுது இது நான்கு தெருவாக விரிவாகியுள்ளது. அதாவது ரிச்சி ஸ்ட்ரீட்,நரசிங்கபுரம் தெரு, மீரன் சய்பு தெரு மற்றும் வாலர் சாலை என நான்காக விரிவாகியுள்ளது.

#4

1950 ல் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வெளியானபோது அவைகளுக்கு தேவைப்படும் உதிரிப் பாகங்கள் விற்க்க இங்கு சில கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் இந்த தெருவானது மிகப்பெரிய அளவில் எலக்ட்ரானிக் சாதங்களை விற்க்கும் தெருவாக மாறிவிட்டது.

#5

1970 ஆம் ஆண்டிற்க்கு பிறகு சிறியதாக இருந்த இந்த கடைகள் சிறிது வளர்ந்ததும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தங்களுக்குத் தேவையான அனைத்து சானங்களையும் சென்னையில் வந்து வங்கினார்கள் . அதனால் அந்த ஐந்து கடைகள் 25 கடைகளாக மாறின.

#6

1982 மற்றும் 1990 களில் மக்களின் தேவைகள் அதிகமானதால் 25 கடைகளாக இருந்த இந்த தெருவில் 125 கடைகளாக பெருகின.

#7

மேலும் வட இந்தியாவில் உள்ள சிலர் இப்படி ஒரு சந்தை சென்னையில் பெரிய அளவில் வளர்வதை உணர்ந்த அவர்கள் 1992 ல் மேலும் 50 கடைகளை சென்னையில் தொடங்கினார்கள். இவ்வாறு சிறிது சிறிதாக இந்த சந்தை வளர்ந்து இன்று இந்தியாவில் இரண்டாவது பெரிய
சந்தையாக வளர்ந்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன்களுக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்