ஆப்பிள் லேப்டாப்பில் வேகமாக ஸ்க்ரீன் ஷாட் எடுக்க 5 வழிகள்

Written By:

ஆப்பிள் நிறுவனத்தின் macOS லேப்டேப்பை பலர் உபயோகித்த அனுபவம் இருந்திருக்கும். இந்த லேப்டாப்பில் பல முறைகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வசதி உள்ளது என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும்.

ஆப்பிள் லேப்டாப்பில் வேகமாக ஸ்க்ரீன் ஷாட் எடுக்க 5 வழிகள்

கீபோர்டின் உதவியுடன் ஒருசில வினாடிகளில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் வசதி இருந்தாலும் இன்னும் ஒருசில வழிகளில் ஸ்க்ரீன் ஷாட்டை எடுக்கலாம்.

'சேஃப்' சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியது, அதுவும் விமானத்தில்..

ஆப்பிள் லேப்டாப்பில் எந்தெந்த வழிகளில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கலாம் என்பதையும் அவற்றில் எந்த முறை விரைவாகவும் தரமாகவும் இருக்கும் என்பதையும் இனி பார்க்கலாம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கமாண்ட், ஷிப்ட், 3. இதுதான் எளிய வழி

ஆப்பிள் லேப்டாப்பில் உள்ள கீபோர்டில் கமாண்ட், ஷிப்ட் மற்றும் நம்பர் 3 ஆகிய மூன்று பட்டன்களையும் ஒருசேர அழுத்தினால் உங்களுக்கு அழகான ஸ்க்ரீன்ஷாட் கிடைக்கும். இந்த ஸ்க்ரீன் ஷாட் தானாகவே உங்கள் டெக்ஸ்டாப்பில் PNG ஃபைல் ஆக சேவ் ஆகிவிடும். உங்கள் விருப்பம் போல் எத்தனை ஸ்க்ரீன் ஷாட் வேண்டுமானாலும் இந்த வழியில் நீங்கள் எடுத்து கொள்ளலாம்.

கமாண்ட், ஷிப்ட் மற்றும் 4 அழுத்தினால் என்ன வரும்?

உங்கள் லேடாப்பில் உள்ள ஸ்கிரீனில் உள்ள ஒருசில குறிப்பிட்ட காட்சியை மட்டும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? அதற்குத்தான் கமாண்ட், ஷிப்ட் மற்றும் 4 அழுத்த வேண்டும். இந்த பட்டன்களை அழுத்தியவுடன், ஒரு பாப் அப் தோன்றும். அதை நகர்த்தி உங்களுக்கு எந்த பகுதி மட்டும் வேண்டுமோ அதை மட்டும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொள்ளலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்க்ரீன் ஷாடுக்கு ஸ்பேஸ்பார் எதற்கு உதவுதுன்னு தெரியுமா?

சில சமயங்களில் நீங்கள் உங்கள் லேப்டாப்பில் பல விண்டோக்களை ஓப்பன் செய்து வைத்திருப்பீர்கள். அந்த சமயத்தில் ஒரு குறிப்பிட்ட விண்டோவில் உள்ளதை மட்டும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வேண்டும் என்றால் கமாண்ட், ஷிப்ட் மற்றும் 4 அழுத்துவதோடு ஸ்பேஸ்பார் பட்டனையும் அழுத்த வேண்டும். அப்போது ஸ்க்ரீனில் ஒரு கேமிரா ஐகான் தோன்றும். அந்த ஐகானை எந்த விண்டோவில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வேண்டுமோ அந்த விண்டோவுக்கு நகர்த்தினால் உங்கள் வேலை சுலபமாக முடிந்துவிடும்

ஸ்க்ரீன் ஷாட் எடுக்க இந்த ஆப் எதற்கு உதவுகிறது தெரியுமா?

ஆப்பிள் லேப்டாப்பில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க கிராப் என்ற ஆப்-ம் உதவும். ஆனால் இத்தனை சுலபமாக வழிகள் இருக்கும்போது எதற்கு இதற்காக ஒரு ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஆப் மூலம் டைம் பிக்ஸ் செய்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொள்ளலாம் என்பதே இதன் புதிய வசதி. ஸ்பாட்லைட் சியர்ச்சில் கிராப் என்று டைப் செய்தாலே போதும், மிக எளிதாக இந்த ஆப்-ஐ நீங்கள் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்,.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டெர்மினல் எதற்கு உதவுகிறது.

நீங்கள் எடுத்த ஸ்க்ரீன் ஷாட் ஃபைலின் டைப், அது சேவ் ஆன லொகேஷன், அதன் பெயர் ஆகியவற்றை கண்டுபிடிக்க இந்த டெர்மினல் நமக்கு உதவுகிறது. மேலும் நீங்கள் ஸ்க்ரீன்ஷாட் செய்த ஃபைலின் பெயரை மாற்றவும், அதன் டைப்பை மாற்றவும் இதில் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Apple's macOS allows its users to capture screenshots in multiple ways. While the keyboard shortcuts let you take a screenshot within seconds, the other ways take a little longer comparatively.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்