மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'டைனமிக் 365' அப்ளிகேசனின் 5 சிறப்பு அம்சங்கள்

By Siva
|

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் புதுப்புது சாஃப்ட்வேர்கள் வெளியாகி நம்முடைய பணியை எளிதாக்கி வருகிறது. தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமின்றி நிறுவனங்களின் வளர்ச்சிகளுக்கும் குறிப்பாக எம்.என்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'டைனமிக் 365' அப்ளிகேசனின் 5 சிறப்பு அம்சங்க

சி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நிர்வாகத்திற்கு பல புதிய சாப்ட்வேர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ஃபேஸ்புக் வொர்க்ப்ளேஸ் என்ற சாப்ட்வேர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் நிலையில் அதே வகையில் பல நிறுவனங்களின் சாப்ட்வேர்கள் சந்தைக்கு அறிமுகமாகி வருகிறது.

நோக்கியா - ஏர்டெல் கூட்டணி : ஜியோவிற்கு வரப்போகும் 5 சிக்கல்கள்.!

இந்நிலையில் மைக்ரோசாப்ட்h நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கிளவுட் சர்வீஸ் 'டைனமிக் 365' என்ற சாப்ட்வேர் சிறிய மற்றும் நடுத்தர வர்க்க தொழிலதிபர்களுக்கு பேருதவியாக இருக்கும் வகையில் தயாராகி உள்ளது.

லீஇகோவின் தீபாவளி தள்ளுபடி : இது அதிரடி தள்ளுபடி!

இந்த கிளவுட் சர்வீஸ் 'டைனமிக் 365' அப்ளிகேசனின் ஐந்து முக்கிய சிறப்பு அம்சங்களை பார்ப்போம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 என்றால் என்ன?

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 என்றால் என்ன?

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 என்பது இரண்டு விதமான சாப்ட்வேர் அப்ளிகேசன். CRM மற்றும் ERP என்று அழைக்கப்படும் இந்த இரண்டு வகை சாப்ட்வேர் ஒன்று வாடிக்கையாளர்களின் உறவை மேம்படுத்தவும் மற்றொன்று நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும், உறவில் விரிசல் வராமல் பார்த்துக் கொள்வதிலும் இந்த அப்ளிகேசன் மிகுந்த பயன்படுகிறது.

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 என்ன செய்யும்?

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 என்ன செய்யும்?

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 ஒரு பொருளின் உற்பத்தி திறனை அதிகரிக்க, அதன் விற்பனையை பெருக்க, பொருளை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க என பல வழிகளிலும் வாடிக்கையாளர்களுக்கும் பொருளை தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 எதில் வேலை செய்யும்?

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 எதில் வேலை செய்யும்?

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 மைக்ரோசாப்ட் ஆபீஸ், ஸ்கைப், யாம்மர் ஆகியவற்றில் வெகு இயல்பாக செயல்படும். அதுமட்டுமின்றி பலவிதமான தயாரிப்புகளிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் உங்கள் தொழிலின் முன்னேற்றத்திற்கு இந்த சாப்ட்வேரை யோசிக்காமல் பயன்படுத்தலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இரண்டு பதிப்புகளில் கிடைக்கும்

இரண்டு பதிப்புகளில் கிடைக்கும்

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 அப்ளிகேசன் எண்டர்பிரைசஸ் மற்றும் பிசினஸ் என இரண்டு வெவ்வேறு பதிப்புகளில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு யூசர் மட்டும் பயன்படுத்தும் ஒரு ஆப் என்ற வகையில் உங்கள் தொழிலை மேம்படுத்த இந்த அப்ளிகேசன் கிடைக்கும்.

இதன்படி நீங்கள் உங்கள் தொழிலின் மேம்பாட்டுக்காக அப்ளிகேசனுக்குரிய விலையை செலுத்தி ஒரிஜினல் லைசென்ஸ் பெற்று நீங்கள் ஒரே ஒருவர் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம். இதே வகையான மற்ற அப்ளிகேசனை விட இந்த மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 அப்ளிகேசன் நான்கு அல்லது ஐந்து மடங்கு பணத்தை உங்களுக்கு மிச்சப்படுத்தும் என்பது மட்டும் உண்மை

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365-ன் போட்டியாளர்கள் யார்?

மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365-ன் போட்டியாளர்கள் யார்?

மார்க்கெட்டில் புதியதாக விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 அப்ளிகேசனுக்கு ஏற்கனவே இதே மார்க்கெட்டில் ஜாம்பவான்களாக உள்ள 'சேல்ஸ்ஃபோர்ஸ், ஓரக்கள் மற்றும் SAP ஆகியவைதான் பெரும் போட்டியாளர்களாக இருக்கும். ஆனால் பயன்படுத்துவதற்கு எளிது, விலையில் மலிவு மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இதன் போட்டியாளர்களை சமாளித்து வாடிக்கையாளர்களின் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Microsoft has announced the roll out of its latest service- Dynamics 365. Here's everything you need to know about the new cloud service.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X