Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஆக்ஷன்... புதிய கேமராவை வழங்கும் வெஹோ!

Updated: Tuesday, July 17, 2012, 14:34 [IST]

veho muvi hd camera with touch control and sleek looks

கேமரா சந்தையில் பல ஆக்சன் கேமராக்கள் வந்துள்ளன. பல பாக்கெட் ஆக்ஷன் கேமராக்களை இதுவரை வழங்கி இருக்கும் வெஹோ இப்போது ஒரு புதிய ஆக்சன் கேமராவைக் களமிறக்குகிறது. இந்த புதிய கேமராவிற்கு முவி எச்டி ஆக்சன் கேமரா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகின்றன.

இந்த வெஹோ கேமரா மழுமையான 720பி எச்டி வீடியோவை பதிவு செய்யும் வசதி கொண்டது. இது எடுக்கும் போட்டோக்கள் மிகவும் துல்லியமாக இருக்கும். அதுபோல் இது பதிவு செய்யும் வீடியோவும் மிகத் தெளிவாக இருக்கும். இதில் இருக்கும் வியூவ் பைன்டர் மூலம் இது எடுக்கும் போட்டாக்கள் மற்றும் வீடியோக்களை மிகத் தெளிவாக பார்க்க முடியும்.

இது ஒரு மெல்லிய கேமராவாகும். இந்த கேமராவில் வாய்ஸ் ஆக்டிவேசன் கன்ட்ரோல், எச்டிஎம்ஐ, மைக்ரோசாப்ட் எஸ்டி கார்டு ஸ்லாட், யுஎஸ்பி மற்றும் எவி அவுட் போன்ற வசதிகள் உள்ளன. இதில் இருக்கும் மைக்ரோ எஸ்டி கார்டு 8ஜிபி மெமரியை சப்போர்ட் செய்கிறது. இதில் இருக்கும் டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கிறது. இதன் 1,400 எம்எஎச் பேட்டரி இந்த கேமராவிற்கு 3 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

இந்த கேமரா ரூ.10,000க்கு விற்கப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் மட்டும் விற்கப்படும் இந்த கேமரா அடுத்த வாரம் அமெரிக்க சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்திய சந்தைக்கும் வரும் என்று நம்பலாம்.

Story first published:  Tuesday, July 17, 2012, 14:34 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll