அசுர ஆற்றலுடன் அசர வைக்கும் கேமராக்கள்!

By Karthikeyan
|
அசுர ஆற்றலுடன் அசர வைக்கும் கேமராக்கள்!

உயர்தர கேமராக்களை வழங்கும் சிக்மா நிறுவனம் இப்போது சிக்மா டிபி வரிசையில் இரண்டு புதிய கேமராக்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய கேமராக்களின் பெயர்கள் டிபி1 மெரில் மற்றும் டிபி2 மெரில் ஆகும். இந்த இரண்டு கேமராக்களும் போவியோன் சென்சாரை வழங்கிய டிக் மெரில் நிறுவனத்தின் பெயரில் வருகிறது.

இந்த புதுப்பிக்கப்பட் கேமராக்கள் புதிய தலைமுறை தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கின்றன. அதுபோல் புதிதாக டிசைன் செய்யப்பட்ட லென்சுக்களைத் தாங்கி வருகின்றன இந்த கேமராக்கள்.

அடுத்ததாக இந்த கேமராக்களில் இருக்கும் சிறப்பு அம்சம் என்னவென்றால் இவை சிக்மாவின் ப்லோரைட் லைக் எப்எல்டி கண்ணாடிகளைக் கொண்டிருக்கிறது. இந்த கேமராக்கள் உயர் ரிசலூசன் கொண்ட 920கே டாட் எல்சிடிகளுடன் வருகிறது. மேலும் மேம்படுத்தப்பட்ட கண்ட்ரோல்கள் கொண்டிருப்பதால் இவை மிக நவீனமாக உள்ளன.

டிபி1எம் 19 மிமீ எப்2.8 லென்ஸ் கொண்டிருப்பதால் அது 28 மிமீக்கு சமமான பீல்டு வீயுவை வழங்குகிறது. டிபி2எம் கேமரா 30 மிமீ எப்2.8 லென்ஸ் கொண்டிருப்பதால் அது 45 மிமீ பீல்டு வீயூவை வழங்குகிறது.

இந்த கேமராக்களின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இவை மேம்படுத்தப்பட்ட கண்ட்ரோல்கள், எப்எல்டி கண்ணாடி துகள்கள், ஒரு டூவல் 3 அடுக்கு ரெஸ்பான்ஸ்வ் அல்டிமேட் என்ஜின்கள், உயர் ரிசலூசன், சிக்மா போட்டோ ப்ரோ ப்ராசஸிங் சாப்ட்வேர், நவீன யூசர் இன்டர்போஸ், மேனுவல் போக்கஸ் மற்றும் மூவி மோட் போன்ற நிறைய அம்சங்களைக் கொண்டு வருகின்றன.

இந்த கேமராக்களில் ஆர்எடபுள்யு மற்றும் ஜேபிஇஜி பார்மெட் பதிவு செய்யும் வசதி வெளிச்சம் மற்றும் நிறம் ஆகியவற்றின் ரேசியோவை 1:1 அளவில் கொண்டிருக்கிறது.

அடுத்த முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த சிக்மா டிபி மெரில் வரிசை கேமராக்கள் சிக்மா போட்டோ ப்ரோ ப்ராசஸிங் சாப்ட்வேர் கொண்டிருப்பதால் ஆர்எடபுள்யு டேட்டாவை மற்றுவது மிக எளிதாக இருக்கிறது.

இந்த கேமராவில் உள்ள மேனுவல் போக்கசை எந்த இடத்திலும் பயன்படுத்த முடியும். அதோடு இதன் 3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பார்ப்பதற்கு மிகத் துல்லியமாகவும் மற்றும் தெளிவாகவும் இருக்கிறது. மூவி மோடில் விஜிஎ (640 x 480)வை ஒரு விநாடிக்கு 30 சூட்டிங் செய்ய முடியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X