அடுத்து ஒரு கேமராவை களமிறக்கிய பானசோனிக்!

By Karthikeyan
|
அடுத்து ஒரு கேமராவை களமிறக்கிய பானசோனிக்!

கேமரா துறையில் கோலோச்சி வரும் பனோசோனிக் நிறுவனம் சமீபத்தில் ஒரு மிகவும் சக்தி வாய்ந்த கேமராவை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கேமராவிற்கு பனோசோனிக் லுமிக்ஸ் டிஎம்சி-எப்ஸட்200 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா சூப்பரான டிஎஸ்எல்ஆர் அனுபவத்தை வழங்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த கேமரா மேனுவல் கண்ட்ரோல் மற்றும் கஸ்டமைசபுள் பங்கசன் ஆகியவற்றுக்கான அத்தனை பட்டன்களையும் கொண்டிருக்கிறது.

இந்த லுமிக்ஸ் கேமரா மிகத் தெளிவாக போட்டோ எடுக்கும் வகையில் 12 எம்பி எம்ஒஎஸ் சென்சார் மற்றும் பெனோ வீனஸ் என்ஜின் ஆகியவற்றைக் கொண்டுல்ளது. அதனால் இது எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்கள் மிகத் தெளிவாக மற்றும் துல்லியமாக இருக்கும்.

இந்த கேமராவின் லென்ஸ் பெரியாதாக இருந்தாலும் கைக்கு அடக்கமாகவே இருக்கிறது. இந்த கேமராவில் இருக்கும் லெயிக்கா டிசி வேரியோ எல்மரிட் லென்ஸ் இந்த கேமராவிற்கு உயர்ந்த தரத்தைத் தருகிறது. அதுபோல் இந்த கேமராவும் மிக உறுதியாக இருக்கிறது. மற்றும் இது நீடித்து உழைக்கும்.

தகவல் பரிமாற்றத்திற்காக இந்த கேமரா யுஎஸ்பி வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும் இது எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் பெரிய திரையில் பார்க்கும் வகையில் எச்டிஎம்ஐ அவுட்டும் கொண்டுள்ளது. இதன் லித்தியம் அயன் பேட்டரி இந்த கேமராவிற்கும் நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது.

இந்த கேமரா 70எம்பி மெமரியுடன் வருகிறது. இந்த மெமரியை எஸ்டி, எஸ்டிஎச்சி மற்றும் எஸ்டிஎக்ஸ்சி போன்ற கார்டுகள் மூலம் விரிவுபடுத்த முடியும். இந்த லுமிக்ஸ் கேமரா வரும் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X