இணையத்துக்கு நாம் அடிமை...!

By Keerthi
|

இன்று இருக்கும் போதைகளிலே மிகவும் கொடிய போதை என்று கேட்டால் அது இன்டர்நெட் போதை தான் நண்பர்களே.

ஒரு நாள் இல்லை இல்லை ஒரு மணி நேரம் மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர்.

இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகிறார்களோ, அதே போலத்தான் இன்டர்நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இணையத்துக்கு நாம் அடிமை...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் ஆகியனவற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இரவு படுக்கப் போகும்போது பேஸ்புக், ட்விட்டர் அப்டேட் செய்து படுக்கைக்குச் செல்வதைப் பழக்கமாகப் பலர் கொண்டுள்ளனர். எனவே இது தடை படுகையில், தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.

ஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர், இன்டர்நெட் இல்லை என்றால், ஆஹா! இன்று விடுதலை; சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X