கெனான் வழங்கும் புதிய கையடக்க கேமரா!

By Karthikeyan
|
கெனான் வழங்கும் புதிய கையடக்க கேமரா!

சமீபத்தில் கெனான் நிறுவனம் பவர்ஷாட் இஎல்பிஜி 300எச்எஸ் என்ற புதிய கேமராவை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய கேமரா உலகத்தின் பார்வையைத் தன்பக்கம் இழுத்திருக்கிறது. ஏனெனில் இந்த கேமராதான் உலகிலேயே 5எக்ஸ் சூம் ஆப்டிக்கல் லென்ஸ் கொண்ட மிக மெல்லிய கேமரா ஆகும்.

இந்த பவர் ஷாட் கேமரா ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது. அதாவது இந்த கேமராவில் 12.1 மெகா பிக்சல் கொண்ட சிசிடி இமேஜ் சென்சாரும் டிஜிக் 4 இமேஜ் ப்ராசஸரும் உண்டு. அதுபோல் இந்த கேமரா 5 x சூம் 24 எம்எம் அல்ட்ரா ஒயிட் ஆங்கிள் லென்சைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் 1080பி எச்டி வீடியோ பதிவும், 32 ஸ்மார்ட் ஆட்டோ சீன் மோடுகளும், மினி எச்டிஎம்ஐ இணைப்பு போர்ட்டும் உண்டு.

இந்த கேமரா 2.7 இன்ச் அளவில் ஒரு எல்சிடி திரையைக் கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் எக்ஸ்டர்னல் மெமரி கார்டும் உண்டு. இதன் எடை 141 கிராம் மட்டுமே.

இந்த கேமரா மிக எளிமையான கேமரா ஆகும். மேலும் இது கைக்கு அடக்கமாக இருப்பதால் இந்த கேமராவை மிக எளிதாக பாக்கெட்டில் வைத்து செல்லலாம். கைக்கு அடக்கமாக இருந்தாலும் இந்த தொழில் நுட்பங்களை அடக்கி வைக்க முடியாத அளவிற்கு இந்த கேமரா நவீனமாக வந்திருக்கிறது.

இந்த கேமராவில் இருக்கும் சிசிடி சென்சார் 12.1 மெகா பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இந்த கேமராவின் விலை ரூ.15000க்குள் இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X