அதிருப்தியால் எதிரொலி : மீண்டும் வருகிறது பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்.!

ஆண்ட்ராய்டில் எப்போது கிடைக்கும்.? ஆப்பிள் கருவிகளில் முதலில் கிடைக்குமா.? சரி எப்போது மீண்டும் அறிமுகமாகிறது.?

|

"சொர்கமே என்றாலும் அது நம்ம ஊருப்போல வருமா.?!" என்பது போல என்னதான் 24 மணி நேரம் மட்டுமே நீடித்தாலும், யாரெல்லாம் வாட்ஸ்ஆப் ஸ்டோரியை பார்த்துள்ளார்கால் என்ற பட்டியல் கிடைத்தாலும் கூட நம் உணர்வுகளை வெளிப்படுத்த உதவிய பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் போல வருமா.?? என்ற பயனர்களின் ஏக்கமும் உடன் பெரும்பாலான மிகவும் எதிர்மறை கருத்துக்களின் எதிரொலியாக வாட்ஸ்ஆப் அதன் பழைய ஸ்டேட்டஸ் அப்டேட்தனை மீண்டும் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

ஆண்ட்ராய்டில் எப்போது கிடைக்கும்.? ஆப்பிள் கருவிகளில் முதலில் கிடைக்குமா.? சரி எப்போது மீண்டும் அறிமுகமாகிறது.? போன்ற உங்களின் பல கேள்விகளுக்கு இதோ பதில்கள்.!

உறுதி

உறுதி

பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அம்சம் ஆனது முதலில் ஆண்ட்ராய்டு பீட்டாவின் அபௌட்' பிரிவில் காணப்பட்டுள்ளது. இப்போது வாட்ஸ்ஆப் அதிகாரப்பூர்வமாக அதன் வருகையை உறுதி செய்துள்ளது.

அடுத்த வாரம் முதல்

அடுத்த வாரம் முதல்

அதாவது பழைய ஸ்டேட்டஸ் அம்சம் ஆனது மீண்டும் அப்டேட் செய்யப்படும். இன்னும் சொல்லப்போனால் அது ஆண்ட்ராய்டு கருவிகளில் அடுத்த வாரம் முதல் கிடைக்கும் மற்றும் ஐபோன்களுக்கு அதற்கு முன்னரே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அபௌட் பிரிவில்

அபௌட் பிரிவில்

பயனர்கள் தங்கள் சுயவிவர படத்தின் கீழ் வெளிப்படும் உரையை மிகவும் 'மிஸ்' செய்கிறார்கள் என்பதை அறிந்தோம். அதனால் இப்போது இந்த அம்சம் அபௌட் பிரிவில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய ஸ்டேட்டஸ் அம்சம்

புதிய ஸ்டேட்டஸ் அம்சம்

அதே நேரத்தில், நாங்கள் பயனர்களுக்கு இன்னும் அதிக வேடிக்கையான மற்றும் அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் ஒரு புதிய ஸ்டேட்டஸ் அம்சத்தை கொண்டுவரவும் பணியாற்றுகிறோம் என்றும் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

நீடிக்கும்

நீடிக்கும்

அதேபோல 24 மணி நேரத்தில் மறையும் புதிய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அம்சமானது, அதே தனி 'டாப்' கொண்டு நீடிக்கும். அது நீக்கப்படாது என்றும் அதன் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடந்து காட்சிப்படுத்த முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெஸெஞ்சர் டே

மெஸெஞ்சர் டே

புதிய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை போலவே பேஸ்புக் நிறுவனமும் அதன் மெஸெஞ்சரில் 'மெஸெஞ்சர் டே' அம்சத்தை தொடங்கியுள்ளது. இந்த அம்சம் மூலம், 24 மணிநேரத்திற்குப் பின் மறைந்துவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

6 புதிய வாட்ஸ்ஆப் அம்சங்கள் : உங்களுக்கு எதெல்லாம் தெரியும்.?

Best Mobiles in India

English summary
WhatsApp Confirms Text Status Returning to Android Next Week, iPhone Users to Get It Soon. Read more about this in Tamil GizBo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X