இந்திய சிறுதொழில் முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் பிசினஸ் பற்றி அறிந்து கொள்வோமா?

By Siva
|

உலகின் முன்னணி சமூகதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்னொரு கிளையான வாட்ஸ் அப்-ஐ நீங்கள் இதுவரை எதற்கு பயன்படுத்தியுள்ளீர்கள். சேட்டிங், புகைப்படம், வீடியோ அனுப்புதல், மற்றும் போன் பேசுதல் ஆகியவற்றிற்குத்தானே.

இந்திய சிறுதொழில் முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் வாட்ஸ் அப்

ஆனால் இனிமேல் தொழில் புரியும் முதலாளிக்கு உதவும் வரப்பிரசாதமாக இந்த வாட்ஸ் அப் மாற போகிறது என்றால் நீங்கள் நம்புகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை. அதுவும் குறிப்பாக இந்தியாவில்..

சிறுதொழில் புரிபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் வாட்ஸ் அப் தனது சேவையை தொடங்கவுள்ளது. இந்த சேவையை முதலில் இந்தியாவில் இருந்து தொடங்கி பின்னர் உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவன விளம்பரத்தூதரானார்-அமிதாப்.!

இந்தியாவில் சி'றுதொழில் புரிபவர்கள் அதிகம் என்பதால் வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவை தேர்வு செய்துள்ளது. இதற்காகவே புதுவகை ஆப் ஒன்று தயாராகி வருவதாகவும், இந்த புதிய வாட்ஸ் அப், ஆப், சிறுதொழில் செய்பவர்களை அவர்களுடைய வாடிக்கையாளர்களை இணைக்க மிகவும் பயன்படும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் இதுகுறித்து கூறியபோது, '10 அல்லது அதற்கும் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களை வைத்து நடத்தும் சிறுதொழில் செய்பவர்களுக்கான சேவை இது, இந்த புதிய சேவையின் மூலம் சிறுதொழில் புரிபவர்கள் மிக எளிதில் தங்களுடைய வாடிக்கையாளர்களை மொபைல் மூலம் அணுகவோ, அவர்களிடம் இருந்து ஆர்டர்களை பெறவோ முடியும். இதனால் மிக எளிதில் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை அதிகரித்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

ஃபேஸ்புக்கிலும் தொழில் புரிபவர்களுக்கு உதவும் வகையில் ஃபேஸ்புக் வொர்க் என்ற ஆப்சன் உள்ளது. ஆனால் வாட்ஸ் அப் பிசினஸ் சேவைக்கும், ஃபேஸ்புக் வொர்க் சேவைக்கும் வித்தியாசம் உள்ளது. ஃபேஸ்புக் சேவை முழுக்க முழுக்க பெரிய அளவில் வர்த்தகம் செய்பவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக 'டிஸ்லைக் ஆப்ஷன்'-அறிவித்தது பேஸ்புக்.!

ஆனால் வாட்ஸ் அப் வொர்க் என்பது அப்படி இல்லை. முழுக்க முழுக்க சிறு வணிகர்களை குறி வைத்துள்ளது. பெரிய வணிகர்களை ஒருசிலரை கவர்வதை விட சிறு வணிகர்களை அதிக எண்ணிக்கையில் கவர்வதுதான் இதன் நோக்கம்

தற்போது வாட்ஸ் அப்-இல் 200 மில்லியன் பயனாளிகள் உள்ளனர். அதில் 15% இந்தியாவில் உள்ள பயனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் இந்தியாவை வாட்ஸ் அப் தேர்வு செய்ததற்கு ஒரு காரணம். மேலும் இந்தியாவில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான சிறு வணிகர்கள் உள்ளனர். வாட்ஸ் அப் பிசினஸ் இந்தியாவில் மிகப் பெரிய வெற்றி அடையும் என்பதற்கான அறிகுறி தற்போது தென்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ் அப் இந்தியா சேவையை சிறு வணிகள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி அவர்களும் பெரு வணிகர்களாக மாற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook-owned WhatsApp finally plans to make some fortune out of its chat app with what it's calling as WhatsApp for Business. Reportedly, the company had chosen the India ground to test the services before it rolls out the service on a global scale.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X