இண்டர்நெட் இல்லாமல் வேலை செய்யும் பயனுள்ள ஆப்ஸ்!!

இன்றைய ஸ்மார்ட்போன் காலகட்டத்தில் இண்டர்நெட் இல்லாமல் உங்களுக்கு மிகவும் பயனுள்ள ஆப்ஸ்களை பற்றி வரிவாக இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்.

Written By:

ஏதேனும் முக்கிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது இண்டர்நெட் தடைப்பட்டால் நிலைமை எப்படி இருக்கும். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு இருக்குமா என நினைப்பவர்களுக்கு இந்தத் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும். இண்டர்நெட் உதவியின்றி வேலை செய்யும் பல்வேறு ஆப்ஸ் இருக்கின்றது.

இங்கு இண்டர்நெட் இல்லாமலும் வேலை செய்யும் பயனுள்ள ஆப்ஸ்களின் பட்டியலைத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அமேசான் கின்டிள்

புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர் எனில் உங்களுக்கு அமேசான் கின்டிள் நல்ல தேர்வாக இருக்கும். ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து விட்டால் போதும், இண்டர்நெட் உதவியின்றி உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆஃப்லைன் மோடிலும் படிக்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் டிரைவ்

இண்டர்நெட் இணைப்பின்றி தரவுகளை எடிட் செய்யக் கூகுள் டிரைவ்ல வழி செய்யும். பல்வேறு இதர கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளைக் காட்டிலும் கூகுள் டிரைவ் உங்களது தரவுகளை கருவியில் சேமிக்கும் ஆப்ஷனினை வழங்குகின்றது. இண்டர்நெட் இணைப்பு இன்றியும் இந்தத் தரவுகளை எடிட் செய்ய முடியும்.

பாக்கெட்

இந்தச் செயலி இணையத்தில் கிடைக்கும் தரவுகளை ஆஃப்லைன் மோடில் படிக்க வழி செய்யும். அதாவது இண்டர்நெட் இருக்கும் போது நீங்கள் படிக்க வேண்டிய இணையப் பக்கங்களை ஆஃப்லைன் மோடில் பதிவு செய்து அதனினை இண்டர்நெட் இல்லாத நேரங்களில் படிக்க வழி செய்கின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் டிரான்ஸ்லேட்

கூகுள் டிரான்ஸ்லேட், தற்சமயம் கிடைப்பதில் அனைவரும் அறிந்த மொழி மாற்றுச் சேவையினை வழங்கி வருகின்றது. கூகுள் டிரான்ஸ்லேட் கிட்டத்தட்ட 90 மொழிகளை சப்போர்ட் செய்கின்றது.

கூகுள் மேப்ஸ்

கூகுள் நிறுவனத்தின் ஆஃப்லைன் மேப்ஸ் சேவை சில காலமாக பயன்பாட்டில் இருந்து வருகின்றது அனைவரும் அறிந்த ஒன்றே. இங்கு நீங்கள் பயணிக்க வேண்டிய பகுதியை இணையத்தில் தேர்வு செய்து ஆஃப்லைனிற்கு பதிவு செய்து கொண்டால் பின் இண்டர்நெட் இல்லாமலும் இந்தச் சேவையினை பயன்படுத்த முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
useful Android apps that work offline
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்