வாட்ஸ்ஆப் வீடியோ கால் செஞ்சீங்களே, அதுல இதெல்லாம் செஞ்சீங்களா.?

வாட்ஸ்ஆப் வீடியோ கால் செஞ்சீங்களா, வீடியோ காலில் இந்த விடயங்களைக் கவனித்தீர்களா.? வாட்ஸ்ஆப் வீடியோ கால் அம்சத்தில் நீங்க கவனிக்க வேண்டியவற்றை இங்கு வழங்கியுள்ளோம்..

By Meganathan
|

வாட்ஸ்ஆப் வீடியோ கால் ஒரு வழியாக ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளங்களில் வழங்கப்பட்டு விட்டது. பல காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த வாட்ஸ்ஆப் வீடியோ கால் பல்வேறு வசதிகளுடன் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் நிலவும் டேட்டா குறைபாடுகளுக்கு ஏற்ப சீரான வீடியோ கால் அனுபவத்தை வழங்கும் படி வாட்ஸ்ஆப் வீடியோ கால் அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாட், மற்றும் இதர மீடியா சேவைகளைப் போல் வீடியோ கால் சேவையும் முழுமையான என்க்ரிப்ஷன் கொண்டுள்ளது.

இவை இல்லாமல் வாட்ஸ்ஆப் வீடியோ கால் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்..

எப்படி டவுன்லோடு செய்யனும்

எப்படி டவுன்லோடு செய்யனும்

வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் சேவை ஆண்ட்ராய்டு 4.1 மற்றும்
அதற்கும் அதிகமான பதிப்புகளில் வேலை செய்யும். இந்த அம்சத்தைப் பெற உங்களது வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்தாலே போதுமானது. அப்டேட் செய்த ஆப்'இல் வீடியோ கால் செய்ய வேண்டிய காண்டாக்ட் கிளிக் செய்து வாய்ஸ் கால் பட்டனை கிளிக் செய்தால் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என இரு ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் வீடியோ கால் ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ கால் பேசலாம்.

மல்டி டாஸ்கிங்

மல்டி டாஸ்கிங்

வாட்ஸ்ஆப் வீடியோ கால் செய்யும் போது மல்டி டாஸ்கிங் செய்ய முடியும். அதாவது வீடியோ காலில் இருக்கும் போதே முன்பக்க கேமரா அல்லது பின்புற கேமராவிற்கு மாற முடியும். வீடியோ கால் பேசும் போது திரையை மினிமைஸ் செய்து மற்றவர்களுக்குச் சாட் செய்ய முடியும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வீடியோவின் தரம்

வீடியோவின் தரம்

நீங்கள் பயன்படுத்தும் இண்டர்நெட் வேகத்திற்கு ஏற்ப வீட்ஸ்ஆப் வீடியோ கால் தரம் மாறுபடும். இதனால் எந்நேரமும் வேகமான வீடியோ கால் அனுபவம் கிடைக்கும் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அடிக்கடி இண்டர்நெட் வேகம் மாறுபடும் என்பதால் அதற்கேற்றபடி சீரான வேகத்தில் வீடியோ கால் இருக்கும் படி செய்திருக்கிறோம் என வாட்ஸ்ஆப்பின் மன்பிரீத் சிங் தெரிவித்தார்.

டேட்டா பயன்பாடு

டேட்டா பயன்பாடு

வாட்ஸ்ஆப் வீடியோ கால் செய்யத் தனி டேப் வழங்கவில்லை. இதே நிலை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டிலும் தொடர்வதால் அனைத்து டேட்டா பயன்பாடும் ஒரே டேட்டா யூசேஜ் பிரிவில் தான் பார்க்க வேண்டும். தற்சமயம் வீடியோ காலிங் செய்யும் போது வேகம் சற்றே குறைந்தாலும் விரைவில் இந்தப் பிரச்சனையைச் சரி செய்திடுவோம் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

க்ரூப் வீடியோ காலிங்

க்ரூப் வீடியோ காலிங்

வாட்ஸ்ஆப் க்ரூப்களில் வீடியோ காலிங் செய்யும் ஆப்ஷன் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த ஆப்ஷன் வழங்கப்படுவதாகக் கூறும் போலி வாட்ஸ்ஆப் லின்க் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கிளிக் செய்ய வேண்டாம். இவற்றைக் கிளிக் செய்தால் உங்களின் கருவி ஹேக் செய்யப்படும் அபாயம் அதிகம் இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
top features to note on whatsApp video calling

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X