ஸ்மார்ட்போனில் எடிட் செய்ய டக்கரான ஆப்ஸ்

|

சில வருடத்திற்கு முன் வரை சிறிய வீடியோ க்ளிப்களை எடிட் செய்யவும் கணினி அல்லது லேப்டாப் அவசியம் தேவைப்படும். வீடியோ எடிட்டிங் செய்வது சற்றே சவாலான காரியம் என்பதால் சிறப்பம்சங்கள் நிறைந்த சாதனத்தில் மட்டுமே எடிட்டிங் செய்ய முடியும்.

ஸ்மார்ட்போனில் எடிட் செய்ய டக்கரான ஆப்ஸ்

இதேபோல் சிக்கலான பெரிய வீடியோக்களை ஸ்மார்ட்போன்களில் செய்ய முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். எனினும் சில சிறிய வீடியோக்களை எளிமையாக எடிட் செய்ய நம் ஸ்மார்ட்போன்களே போதுமானது.

இங்கு ஸ்மார்ட்போன்களில் எடிட் செய்ய வழி செய்யும் சிறப்பான ஐந்து எடிட் செயலிகளை பற்றி பார்ப்போம்..

அடோப் பிரீமியர் கிளிப்:

அடோப் பிரீமியர் கிளிப்:

வீடியோ அல்லது போட்டோ எடிட்டிங் செய்ய நினைத்தாலே நம் நினைவிற்கு வருவது அடோப் தான். ஆட்டா ஜெனரேட் வீடியோ போன்ற வசதிகள் நிறைந்த செயலியாக அடோப் பிரிமீயர் கிளிக் இருக்கிறது. இதில் நீங்கள் விரும்பிய புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்களை எடிட் செய்து, ஸ்லோ மோஷன் எஃபெக்ட்களை செய்ய முடியும்.

ஃபன்மேட் வீடியோ எஃபெக்ட்ஸ் எடிட்டர்:

ஃபன்மேட் வீடியோ எஃபெக்ட்ஸ் எடிட்டர்:

இந்த செயலியில் 15-க்கும் அதிகமான வீடியோ எஃபெக்ட்களை கொண்டுள்ள செயலியில் அதிகப்படியான மியூசிக் வீடியோக்களை எடிட் செய்ய முடியும். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்ய முடியும்.

மூவி மேக்கர் ஃபிலிம்மேக்கர்:

மூவி மேக்கர் ஃபிலிம்மேக்கர்:

அதிகப்படியான ஃபில்ட்டர் மற்றும் அனிமேஷன் வி.எஃப்.எக்ஸ் எஃபெக்ட்களை பயன்படுத்த மூவி மேக்கர் ஃபிலிம் மேக்கர் செயலி சிறப்பானதாக உள்ளது. இத்துடன் அனிமேஷன்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்பதையும் எடிட் செய்ய முடியும். இந்த செயலியும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.

வீடியோ எடிட்டர்:

வீடியோ எடிட்டர்:

எளிமையான வீடியோ எடிட்டர் செயலிகளில் ஒன்றாக இது இருக்கிறது. வீடியோக்களை ட்ரிம் செய்து, கிளிப்களை ஆர்கனைஸ் செய்து மியூசிக் சேர்க்க முடியும். இந்த செயலியில் வீடியோக்களை எடிட் செய்து இன்ஸ்டாகிராம், வைன்ஸ் உள்ளிட்டவற்றில் அப்லோடு செய்ய முடியும்.

வீடியோ ஷோ:

வீடியோ ஷோ:

வீடியோக்களில் மியூசிக் சேர்க்க தலைச்சிறந்த செயலி வீடியோ ஷோ. இதில் 10,000க்கும் அதிகமான மியூசிக் வழங்கப்பட்டுள்ளது. இதில் உங்களது வீடியோவிற்கு ஏற்ற இசையை தேர்வு செய்து கொள்ளலாம். இத்துடன் வீடியோவிற்கு வாய்ஸ் டப்பிங், டூடுள், ஸ்லோ-மோ, ஃபாஸ்ட்-மோ மேலும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
A couple of years ago, we used to edit even a small video with minimum duration in our PC or laptop. Of course, Video editing is one of the heaviest tasks that needs a decent specification to support the process.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X