இண்டர்நெட்டால் உங்கள் கவனம் சிதறுகிறதா? இதோ உங்களுக்கு உதவும் ஐந்து ஆப்ஸ்கள்

இண்டர்நெட் என்பது 21ஆம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையில்லை.

By Siva
|

இண்டர்நெட் என்பது 21ஆம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையில்லை. முன்பெல்லாம் மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த காரியங்கள் தற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில நொடிகளில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முடிந்து விடுகிறது. இண்டர்நெட் நமது வேலைகளை எளிமை ஆக்கியதோடு, நேரத்தையும் பெருமளவு மிச்சப்படுத்தியது.

இண்டர்நெட்டால் உங்கள் கவனம் சிதறுகிறதா? இதோ உங்களுக்கு உதவும் ஐந்து ஆப

எனவே தற்போதை மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இண்டர்நெட் என்று இல்லாத ஒரு உலகை நினைத்து பார்க்க கூட விரும்ப மாட்டார்கள். இண்டர்நெட் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே நேரத்தில் இண்டர்நெட்டால் ஒருசில தீமைகளும் உள்ளது.

ஆக்சிஜன் ஓஎஸ் 3.5.3 மாற்றத்துடன் இந்தியாவில் வெளிவரும் ஒன்ப்ளஸ் 3T ஸ்மார்ட்போன்

பெரும்பாலான நியூரோசர்ஜன்கள் குறிப்பிடுவது அதிக அளவு இண்டர்நெட் உபயோகிப்பதால் மூளைக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் சிந்திக்கும் திறன் குறைகிறது என்றும், மனிதனை இண்டர்நெட் சோம்பேறி ஆக்குவதாகவும் கருத்து கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி தூக்கமின்மை, உறவுகளில் விரிசல், ஆகியவைகளும் ஏற்படுகிறது.

வீடியோகான் அல்ட்ரா30 அறிமுகம் : 4ஜி, 4000எம்ஏஎச் பேட்டரியுடன் ரூ.8,590/-க்கு.!

இண்டர்நெட் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அதே நேரத்தில் இண்டர்நெட் உபயோகிப்பதை ஒரு அளவுடன் வைத்து கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் இண்டர்நெட் பயன்படுத்தும் அளவை கட்டுப்படுத்த ஐந்து ஆப்ஸ்கள் உதவுகின்றன. அவை என்ன ஆப்ஸ்கள் என்பதை தற்போது பார்ப்போம்

ஆஃப்டைம் (Offtime) ஆப்ஸ்: உங்களை திசை திருப்பும் ஒரு ஆப்ஸ்

ஆஃப்டைம் (Offtime) ஆப்ஸ்: உங்களை திசை திருப்பும் ஒரு ஆப்ஸ்

இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளிகளுக்கு இலவசமாகவே கிடைக்கின்றது. இந்த ஆப், உங்கள் வேலைகள் தடைபடாமல் உங்களுக்கு வரும் தேவையில்லாத அல்லது முக்கியத்துவம் இல்லாத மெசேஜ்கள் மற்றும் நோட்டிபிகேஷனை பில்டர் செய்து விடும்.

அதே நேரத்தில் இவ்வாறு மெசேஜ் அனுப்பியவர்களுக்கு உரிய பதிலை அளித்துவிடும். நீங்கள் உங்களுடைய முக்கிய பணிகளை முடித்த பின்னர் மாலையில் உங்களுக்கு வந்த அனைத்து மெசேஜ்கள் மற்றும் நோட்டிபிகேசனை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். அவற்றுக்கு நீங்கள் பதில் அளிக்கவோ அல்லது தவிர்க்கவோ செய்யலாம்.

இடையிடையே மெசேஜ் மற்றும் நோட்டிபிகேசன் வந்தால் உங்களுடைய பணி பாதிக்கப்படுவதோடு உற்பத்தி திறனும் குறைந்துவிடும் அபாயத்தை இந்த ஆப் தடுத்துவிடுவதால் பெரும்பாலானோர் இதனை உபயோகப்படுத்த விரும்பி டவுன்லோடு செய்கின்றனர்,. நீங்களும் டவுன்லோடு செய்து உபயோகப்படுத்தி பார்க்கலாமே...

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குவாலிட்டி டைம் (QualityTime) - உங்கள் டிஜிட்டல் டயட்

குவாலிட்டி டைம் (QualityTime) - உங்கள் டிஜிட்டல் டயட்

இந்த ஆப் நீங்கள் எவ்வளவு நேரம் எந்தெந்த வகையில் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறீர்கள் என்ற பட்டியலை உங்களுக்கு தினமும் அல்லது ஒருசில மணி நேரங்களுக்கு ஒருமுறை உங்களுக்கு ரிப்போர்ட் தரும். அதுமட்டுமின்றி நீங்கள் அதிக நேரம் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை உபயோகித்தால் உங்களுக்கு வார்னிங் மெசேஜ் கொடுக்கும்.

இதனால் ஸ்மார்ட்போனையோ அல்லது இண்டர்நெட்டையோ அதிக அளவு பயன்படுத்துவதை தடுக்கும் வாய்ப்பை இந்த ஆப் நமக்கு பெற்று தருகிறது. அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்துவதில் இருந்து நம்மை கட்டுப்படுத்தி நமது உடலை பேணிக்காப்பதில் இந்த ஆப் உதவுவதால் இது நமது டிஜிட்டல் டயட் ஆப் என்றே கூறலாம்

செல்ஃப் கண்ட்ரோல் (SelfContol)

செல்ஃப் கண்ட்ரோல் (SelfContol)

பெயருக்கு ஏற்றவாறு உள்ள இந்த ஐஓஎஸ் ஆப், நம்மை வெகுவாக இண்டர்நெட் பயன்பாட்டில் இருந்து கட்டுப்படுத்துகிறது. நீங்கள் முக்கிய வேலைகளில் இருக்கும் நேரத்தை இந்த ஆஃபின் மூலம் குறிப்பிட்டுவிட்டால் போதும். அந்த நேரத்தில் வரும் மெசேஜ், நோட்டிபிகேசன் ஆகியவற்றை கட்டுப்படுத்தி நீங்கள் ஃப்ரி ஆனவுடன் உங்களுக்கு வரும் படி கட்டுப்படுத்தும்.

மேலும் ஒருசில ஆப்கள், இணையதளங்கள் ஆகியவற்றை இந்த ஆஃப் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே தேவையில்லாமல் நாம் இண்டர்நெட்டில் உலவுவதை இந்த ஆப் தடுத்து இறுத்தும். இந்த ஆப், தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

ஸ்டே ஆன் டேஸ்க் (Stay on Task)

ஸ்டே ஆன் டேஸ்க் (Stay on Task)

சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட இந்த ஆப் நாம் பணிகளில் மூழ்கி இருக்கும்போது எந்த தொல்லையும் ஸ்மார்ட்போனால் ஏற்படாதவாறு தடுக்கின்றது. இந்த ஆப் மூலம் நம்முடைய பணிகளை ஷெட்யூல் செய்வதுடன் நம்மை அதிகளவு இண்டர்நெட் உபயோகிப்பதை தடுக்கின்றது.

ஃபிளிப்ட் (Flipd)

ஃபிளிப்ட் (Flipd)

பணியில் இருக்கும்போது நம்முடைய எண்ணங்கள் திசை திரும்பாமல் வைத்து கொள்வதில் இந்த ஆப் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்மார்ட்போனால் வரும் கவனத்தை திசை திருப்பும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு நம்முடைய பணி தங்கு தடையில்லாமல் செய்வதற்கு இந்த ஆப் உதவுகிறது. இந்த ஆப்-ஐ உபயோகிப்பதும் மிகவும் எளிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here are 5 apps that help reduce internet addiction and improve productivity at work. Check which app suits you better.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X