கூகுள் போட்டோ செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய வசதிகள்

By Siva
|

சமீபத்தில் நடைபெற்ற கூகுள் நிறுவனத்தின் I/O மாநாட்டில் கூகுள் போட்டோ செக்சனில் புதிய அப்டேட் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. குறிப்பாக லைப்ரரியை பகிர்ந்து கொள்வது, போட்டோ புக்ஸ், உள்பட பல புதிய அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தது.

கூகுள் போட்டோ செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய வசதிகள்

கூகுள் போட்டோ என்பது பிக்காஸா இணையதளத்தின் மாற்று என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இணணயதளத்தில் விதவிதமான புகைப்படங்களை அப்லோடு செய்தல், சேமித்து வைத்தல், மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய வசதிகள் உள்ளது.

ஆண்ட்ராய்ட், ஐஒஎஸ் மற்றும் இணையதளம் என அனைத்து விதங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வரும் இந்த கூகுள் போட்டோவின் புதிய வசதிகள் குறித்த அறிவிப்புகளை விரிவாக பார்ப்போம்

பகிர்வு குறித்து பரிந்துரை செய்வது:

பகிர்வு குறித்து பரிந்துரை செய்வது:

இந்த புதிய வசதி மூலம் ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து நீங்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பகிர முயற்சிக்கும்போது, அந்த புகைப்படத்தின் முழு விபரங்களை இதில் உள்ள டெக்னாலஜி உங்களுக்கு தெரிவிக்கும்.

அதுமட்டுமின்றி நீங்கள் ஷேர் செய்த புகைப்படங்களுக்கு இணையாக கூகுள் போட்டோவின் டேட்டாபேசில் உள்ள மற்ற புகைப்படங்களையும் உங்களுக்கு அது பரிந்துரை செய்யும். இந்த புதிய வசதியால் உங்களுக்கு பிடித்த புகைப்படங்களுக்கு இணையாக எந்தெந்த போட்டோக்கள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் புகைப்பட லைப்ரரியையும் ஷேர் செய்யலாம்

உங்கள் புகைப்பட லைப்ரரியையும் ஷேர் செய்யலாம்

ஒரு குறிப்பிட்ட விழா அல்லது விசேஷங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உங்களுடன் உங்களுக்கு பிடித்தமானவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் அந்த புகைப்படத்தை ஷேர் செய்ய நினைத்தால் அவர்களுக்கு புகைப்படத்தை மொத்தமாக டேக் செய்யும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு ஒருவித புதிய உணர்வுகள் கிடைக்கும்

விருப்பமான வீடியோக்களை புக்மார்க் செய்து பார்த்து மகிழ்வது எப்படி?விருப்பமான வீடியோக்களை புக்மார்க் செய்து பார்த்து மகிழ்வது எப்படி?

போட்டோ புக்ஸ்:

போட்டோ புக்ஸ்:

நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படங்ளையும் ஆல்பம் போல சேமித்து வைக்க விரும்பினால் இந்த வசதி உங்களுக்கு பயன்படும். நீங்கள் எடுக்கும் சிறந்த போட்டோக்களை சேமித்து வைக்கலாம் என்று அதுவே உங்களுக்கு பரிந்துரை செய்யும்.

இவ்வாறு பரிந்துரை செய்யப்படும் புகைப்படங்களை நீங்கள் உங்களுக்கான ஆல்பத்தில் வைத்து சேமித்து கொள்ளலாம். இந்த சேவையை பெறா ரூ.647 மற்றும் ரூ.1295 என்ற இரண்டு வித கட்டணங்களில் பெற்று கொள்ளலாம்,.

கூகுள் லென்ஸ்:

கூகுள் லென்ஸ்:

கூகுள் லென்ஸ் என்ற இந்த புதிய வசதியின் மூலம் ஒரு இடத்தை கூகுள் லென்ஸ் மூலம் புகைப்படத்தை நீங்கள் எடுத்தால், உடனடியாக அந்தப் பகுதி குறித்த முழு விவரங்களை கூகுள் உங்களுக்கு அளிக்கும். அது எந்த இடமாக இருந்தாலும் நொடிப்பொழுதில் உங்களுக்கு தேவையான விபரங்களை கொடுக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Recently, at the Google I/O conference, the company has announced a slew of updates for the Google Photos including -- shared libraries, suggested sharing, photo books, and much more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X