கிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்ப 2% கட்டணம்: பேடிஎம் அறிவிப்பு ஏன்?

இதன்படி கிரெடிட் கார்டில் இருந்து பேடிஎம் வாலட்டுக்கு பணம் அனுப்ப 2% கட்டணமா?

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் பேடிஎம், சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கிரெடிட் கார்டில் இருந்து பேடிஎம் வாலட்டுக்கு பணம் அனுப்ப 2% கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுடஹன் அந்த அறிவிப்பு.

கிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்ப 2% கட்டணம்: பேடிஎம் அறிவிப்பு ஏன

தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரமான சேவை புரிய இந்த உயர்வு அவசியம் என்றும் இந்த உயர்வை தங்கள் வாடிக்கையாளர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அறிவித்துள்ளது. மேலும் பேடிஎம் வாலட்டை ஒருசில வாடிக்கையாளர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாலும் இந்த கட்டணம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஒருசில டெக்னிக்கல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கிரெடிட் கார்டில் இருந்து வாலட்டுக்கு தேவையான பணத்தை அனுப்பி, அதன்பின்னர் வாலட்டில் இருந்து இலவசமாக வங்கி சேமிப்பு கணக்கிற்கு பணத்தை மாற்றி வருவதாகவும், இதன் காரணமாக எவ்வித கட்டணமும் இன்றி பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஒருசில வாடிக்கையாளர்கள் ஈடுபட்டு வருவதால் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த கட்டண உயர்வு மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பேடிஎம் அறிவித்துள்ளது.

ரூ.339/-க்கு பிஎஸ்என்எல் அதிரடி, ரூ.303/- ஜியோவிற்கு பதிலடி.!

மேலும் இதுகுறித்து விளக்கமளித்து பேடிஎம், 'ஒருசில உண்மையான வாடிக்கையாளர்கள் பேடிஎம் மூலம் நேரடியாக பொருட்களை வாங்குபவர்கள் இதனால் பாதிக்கப்படுவது உண்மைதான் என்றும், ஆனாலும் முறைகேடு வாடிக்கையாளர்களை தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் ஆகிறது என்றும் அறிவித்துள்ளது.

கிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்ப 2% கட்டணம்: பேடிஎம் அறிவிப்பு ஏன

அதே நேரம் பேடிஎம் மூலம் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து நேரடியாக ஷாப்பிங் செய்த பொருளுக்கு பணம் செலுத்தினால் கட்டணம் எதுவும் இல்லை என்றும், அறிவித்துள்ளது. மேலும் 2% கட்டணம் பெறப்பட்ட தொகை கூப்பன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக பேடிஎம் அறிவித்துள்ளது.

இந்த கூப்பனை மூன்றாவது நிறுவனங்களான ஸ்விஜி, உபேர் ஆகியவற்றில் உபயோகம் செய்து கொள்ளலாம் என என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த கூப்பன் ரூ.250க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு மட்டுமே என்றும் செய்திகள் கூறுகின்றன

நீங்களும் செய்யலாம் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.!

ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்ட் பயன்படுத்தும்போது இந்த கூப்பன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்றும், இந்த கூப்பன்களை தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூப்பன்களை பில்கள் கட்டவோ, ரீசார்ஜ் செய்யவோ கூட பயன்படுத்தி கொள்ளலம். ஆனால் அதே நேரத்தில் இவ்வருடம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த கூப்பன்களை பயன்படுத்திட வேண்டும். ஆனாலும் வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் கால நீட்டிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கட்டணம் கிரெடிட் கார்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் டெபிட் கார்ட், நெட் பேங்கிங் உள்பட மற்ற பரிவர்த்தனைகளுக்கு வழக்கம் போல் கட்டணம் எதுவும் இல்லை என்றும் பேடிஎம் அறிவித்துள்ளது.


புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Paytm will now charge 2 percent fee on using Credit Cards
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்