பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் ஆதார் அட்டை செயலி மூலம் பணவர்த்தனை

ஆதார் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்யும் செயலியை பிரதமர் அறிமுகம் செய்ய உள்ளார்

Written By:

பாரத பிரதமர் நரேந்திர மோடி ரொக்கமில்லா பண பரிவர்த்தனை குறித்து மிக அதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் விரைவில் ஆதார் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்யும் செயலியை அறிமுகம் செய்ய உள்ளார்.

பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் ஆதார் அட்டை செயலி மூலம் பணவர்த்தனை

இந்த செயலில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பி.எஸ்.என்.எல் இணைந்து உருவாக்கவூள்ள மொபிகேஷ் வாலட் செயலிக்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது., ஐ.டி.எப்.சி வங்கி மற்றும் UIDAI மற்றும் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய வங்கிகள் பிரதமரின் இந்த புதிய திட்டத்திற்கு உறுதுணையாக இருக்க சம்மதித்துள்ளன\

பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பில் சாட் ஹெட்ஸ் பெறுவது எப்படி.?

பிளாஸ்டி ஆதார் கார்டில் இருந்து கேஷ்லெஸ் பண வர்த்தனைக்கு பொதுமக்களை பழக்கப்படுத்தவே இந்த செயலியை பிரதமர் அறிமுகம் செய்ய உள்ளார். மேலும் இந்த பண பரிவர்த்தனையால் சேவை வரி உள்பட எந்தவிதமான வரிகளும் இல்லை.

இந்த செயலி செயல்படுவது எப்படி?

1. இந்த செயலியை பயன்படுத்த விரும்புபவர்கள் முதலில் தங்கள் ஸ்மார்ட்போனில் செயலியை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்

2. பின்னர் இதனுடன் பயோமெட்ரிக் ரீடரை இணைக்க வேண்டும். இதற்கு ரூ.2000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. இந்த செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்ய உங்கள் ஆதார் எண்ணை செயலில் டைப் செய்ய வெனெடும். பின்னர் வங்கி விபரங்களை தெரிவித்தவுடன் பயோமெட்ரிக் உங்கள் விபரங்களை ஸ்கேன் செய்யும். பின்னர் இதற்கென கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்

உடனடியாக பேடிஎம் க்யூஆர் குறியீடு உருவாக்குவது எப்படி.?

இந்தியாவில் சுமார் 40 கோடி ஆதார் எண்கள் வங்கியுடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மீதி ஆதார் எண்களை வரும் மார்ச் மாதத்திற்குள் இணைக்க திட்டமிட்டுள்ளது. எனவே இந்த பர்வர்த்தனை மிக எளிய முறையில் செயலுக்கு வந்துவிடும்

இந்த பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர் எந்த நேரமும் ஆதார் கார்டை தனது கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் வாடிக்கையாளரிடம் ஒரு ஸ்மார்ட்போனும் பயோமெட்ரிக் ஸ்கேனரும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Aadhaar Payment app launched to ease digital payments.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்